பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
203

ஐந

ஐந்தாம் திருவாய்மொழி - “எங்ஙனேயோ”

முன்னுரை

    ஈடு :- 1“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்; பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே 2“ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில் ‘ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு விஷயந்தான் இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்; 3“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று, ‘சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்; “நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே” என்று, ‘ஒன்றை நினைத்துத் தரிக்

____________________________________________________

1. மேல் திருவாய்மொழியில் கூறப்பட்ட துக்கமெல்லாம் தீர்ந்தன
  இத்திருவாய்மொழியில் என்று கூறத் திருவுள்ளம்பற்றி, மேல்
  திருவாய்மொழியில் உண்டான துக்கத்திற்குக் காரணங்கள் மூன்று
  என்கிறார் ‘மாசறு சோதி’ என்றது முதல், ‘விரகு அற்றது என்றும்
  வெறுத்தாள்’ என்றது முடிய. ‘தலைக்கட்டப் பெறாதபடி இருள் வந்து மூடி
  நின்றமையாலே’ என்பது, எஞ்சி நிற்கிறது.

2. ‘ஊரெல்லாம் துஞ்சி’ என்றது முதல் ‘உறங்கினார்கள் என்று வெறுத்தாள்’
  என்றது முடிய, முதல் காரணம். ‘முதலிலே மடல் ஊருகைக்கு விஷயந்தான்
  இல்லாதபடி’ என்றது, இவர்கள் பழி சொல்லுமது, அவ்விஷயத்தை
  நினைப்பூட்டுமதாய், அவ்வழியாலே மடல் ஊருகைக்கு விஷயத்தைக்
  காட்டிக் கொடுக்குமது ஒன்றாகையாலே மடல் ஊருகைக்கு விஷயம் உண்டு;
  இவர்கள் பழி சொல்லாதே உறங்குகையாலே மடல் ஊருகைக்கு விஷயம்
  இல்லை என்றபடி.

3. ‘அம் சுடர வெய்யோன்’ என்றது முதல் ‘இல்லையாயிற்று என்று வெறுத்தாள்’
  என்றது முடிய, இரண்டாவது காரணம். ‘நீயும் பாங்கல்லை’ என்றது முதல்,
  ‘விரகு அற்றது என்றும் வெறுத்தாள்’ என்றது முடிய, மூன்றாவது காரணம்.
  ‘ஒன்றை நினைத்துத் தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றது, மனம் அவன்
  பக்கலிலே ஈடுபட்டிருக்கையாலே வேறு ஒன்றினை நினைத்துத்
  தரிக்கைக்கும் உடல் அன்றிக்கே விரகு அற்றது என்றபடி. ஆக, பழி
  சொல்லுவாருங்கூட இல்லாதபடி உறங்குகையாலும், சூரிய உதயத்துக்குச்
  சூசகமும் இன்றிக்கே இருக்கின்ற இராப்பொழுதின் துன்பமாகையாலும்,
  நெஞ்சு பாங்கு அல்லாமையாலும் வெறுத்தாள் என்று துக்கத்திற்குக்
  காரணங்கள் மூன்று என்றபடி.