பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
204

New Page 1

கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள். 1இந்தக் குறைகள் எல்லாம் தீரும்படி போதும் விடியப்பெற்று, “அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற 2இழவு தீரஉகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத்திருவாய்மொழியில். என்றது, 3பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து, “தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும், “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும், “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது; 4அவ்வழியாலே அவர்கள்தாம் இவ்விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ. 5சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலிபாயப் பெற்றது. இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.

_____________________________________________________

1. மேல் திருவாய்மொழியில் துக்கத்திற்குக் காரணங்களாகக் கூறப்பட்ட
  மூன்றும், இத்திருவாய்மொழியில் நீங்கிய விதத்தை அருளிச்செய்கிறார்
  ‘இந்தக் குறைகள் எல்லாம்’ என்றது முதல், ‘தரிக்கைக்கும் துணையாயிற்று
  என்றபடி’ என்றது முடிய.

2. ‘இழவுதீர’ உகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது’
  என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற “தோழிமார்களும் அன்னையரும்
  முனிதிர்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. உகப்பாள்-உயிர்த்தோழி.
  பொடிவார்-தாய்மார். ஹிதம் சொல்லுவார்-மற்றைத் தோழிகள்.

3. மேல் வாக்கியத்தின் விவரணம், ‘பின்னர்’ என்று தொடங்கும் வாக்கியம்.
  பின்னர்-போது விடிந்த பின்னர்.

4. ஹிதம் சொல்லி அலைப்பார் உண்டாதல், துக்கத்திற்குக் காரணம் அன்றோ,
  அதனை அநுகூலமாகச் சொல்லுகிறது என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவ்வழியாலே’ என்று தொடங்கி. அவ்வழியாலே
  -பழிசொல்லுகிற வழியாலே.

5. இரண்டாவது மூன்றாவது வெறுப்புக்களும் தீர்ந்தமையைக் காட்டுகிறார்
  ‘சூரியனும் உதித்து’ என்று தொடங்கும் வாக்கியத்தாலும், இவ்வளவு
  ஆஸ்வாசம்’ என்று தொடங்கும் வாக்கியத்தாலும், பாலிபாயப் பெறுதல்-பல
  இடங்களிலும் பரந்து செல்லுதல். ஆஸ்வாசம்-இளைப்பாறுதல்.