|
1இப
1இப்படி
இரவு வியசனம் போம்படி போது விடியப்பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே
ஆற்றாமைக்கும் காரணமாய் நோவுபட்டுச் செல்லாநிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும், ‘நீ இப்படி
இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலையுடையவளாயிருத்தலாகிற இது 2உனக்குக் குடிப்பழி,
உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப்
பார்க்க, ‘இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள்,
3‘நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ்விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்;
நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக் காண்கையாலே
உள்ளபடி கண்டேன்; ஆகையாலே, நம்பியுடைய 4வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும்
பெருமையிலும் நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம்
படிகளைச் சொல்லாநிற்கச் செய்தே; 5‘தம் முயற்சி
_____________________________________________________
1. இத்திருவாய்மொழியில்
சொல்லப்படும் பொருளை அருளிச்செய்கிறார்
‘இப்படி இரவு’ என்று தொடங்கி.
2. ‘உனக்குக் குடிப்பழி’
என்றது, “நிறைந்த வன்பழி” என்ற பாசுரப் பகுதியைத்
திருவுள்ளம்பற்றி. “முன்னின்றாய்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றிப் ‘பெண்
தன்மைக்குப் போராது’ என்றும், “சிறந்த கீர்த்தி” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி
‘அவன் தலைமைக்கும் போராது’ என்றும்
அருளிச்செய்கிறார்.
3. “என் நெஞ்சினால் நோக்கிக்
காணீர்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
‘நீங்கள், சிலர்’ என்றது முதல், ‘உள்ளபடி கண்டேன்’
என்றது முடிய
அருளிச்செய்கிறார்.
4. “நீலமேனி” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘வடிவழகிலும்’ என்றும்,
“பூந்தண்மாலைத் தண் துழாயும்” என்றதனைத் திருவுள்ளம்
பற்றி
‘ஒப்பனை அழகிலும்’ என்றும், “மின்னுநூலும் குண்டலுமும்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி
‘ஆபரணச்சேர்த்தியிலும்’ என்றும், “பொன்முடியும்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றிப்
‘பெருமையிலும்’ என்றும்
அருளிச்செய்கிறார்.
5. “அறிவரியபிரானை”
என்றதனைத் திருவுள்ளம்பற்றித் ‘தம் முயற்சி கொண்டு’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
|