|
New Page 2
கொண்டு அறிவார்க்கு அறிய
ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ, 1இவ்வஸ்துதான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற
போது பெறுகிறோம், பிறர் அறியாது ஒழியப் பெற்றோமேயன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக்கட்டுகிறது.
2ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும்,
அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; அவனை நினைக்கப் பெறுகையாலே
ஒரு பிரீதியும், அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; சூரியன் உதித்துப்
பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும், அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு
பிரீதி இன்மையுமாய்; பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.
3“மாசறுசோதி”
என்ற திருவாய்மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும் மனோவேகத்தாலே உபாய அத்யவசாயம்
கலங்கினபடி; “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியில், அந்த மனோவேகமுங்கூடக் கலங்கினபடி; இத்திருவாய்மொழியில்,
‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லாநிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
4நன்று;
“ஏழையராவி” என்ற திருவாய்மொழியும், ‘உருவெளிப்பாடு’ சொல்லாநின்றதே, அதற்கும் இத்
____________________________________________________
1. மேலே கூறிய வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘இவ்வஸ்து தான்’
என்று தொடங்கி.
2. அந்யாபதேசமாவது, அப்ரீதியை
மூலமாகக் கொண்டதாகையாலே, மேலே
மூன்று வகையாக அருளிச்செய்த தரிப்பிலே, அப்ரீதியும் உண்டு
என்று,
இப்படிப் பிரீதி அப்ரீதிகளின் சாம்யத்தை மூன்று வகையாகக் காட்டுகிறார்
‘ஆக’ என்று
தொடங்கி.
3. மூன்று திருவாய்மொழிகட்கும்
சுவாபதேசப் பொருள் அருளிச்செய்கிறார்
‘மாசறுசோதி’ என்றது முதல், ‘பிராப்பியருசி நலிகிறபடி’
என்றது முடிய.
4. இத்திருவாய்மொழியில்
வருகின்ற “வந்து எங்கும் நின்றிடுமே” என்பது
உருவெளிப்பாடு ஆகையாலே, உருவெளிப்பாட்டினைக் கூறுகின்ற
“ஏழையராவியுண்ணும்” என்ற திருவாய்மொழிக்கும், இதற்கும் வேறுபாடு
என்னை? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘நன்று’ என்று
தொடங்கி.
|