பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
209

அன

    அன்னைமீர்காள் முனிவது எங்ஙனேயோ - 1ஹிதம் சொல்லத் தொடங்கினவாறே தந்தாமை மறக்குமித்தனையோ. என்னை முனிவது எங்ஙனேயோ - 2ஒன்றை நீக்குவதற்குப் பார்த்தால் அதனுடைய நிதானம் அறிந்து நீக்க வேண்டாவோ. என்றது, என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது என்றபடி. என்னை நீர் முனிவது எங்ஙனேயோ - 3என்னுடைய நிலைக்கும் உங்களுடைய ஹிதவசனத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு. நீர் என்னை முனிவது எங்ஙனேயோ - நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ? அன்னை மீர்காள் நம்பியை நான் கண்டபின் - 4இந்தக் குல தர்மத்துக்கு நான் ஏதேனும் தப்பநின்றது உண்டோ. “பேராளன் பேரோதும் பெரியோரை” என்றும், “எவரேலும் அவர்” என்றும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக்

____________________________________________________

1. “அன்னைமீர்காள்” என்ற சொல்லிலே நோக்காக ‘ஹிதம் சொல்லத்
   தொடங்கினவாறே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘தந்தாமை’
   என்றது, “பிரான் இருந்தமை காட்டினீர்” என்கிறபடியே, பிரானைக் காட்டி
   ஈடுபாடு உண்டாவதற்குக் காரணமான தங்கள் தங்களை என்றபடி.

2. “என்னை” என்ற சொல்லிலே நோக்காக, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘ஒன்றை நீக்குவதற்கு’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘என்னுடைய’ என்று தொடங்கி. பிராவண்யம்-ஈடுபாடு.

3. ‘என்னுடைய நிலைக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
  நான் மிகுந்த ஈடுபாட்டினையுடையவள் ஆகையாலே, கரை மேலே
  இருக்கிற உங்கள் வார்த்தைகளைக் கொண்டு காரியம் இல்லை என்றபடி.
  ஆக, “நீர்” என்பதற்கு, இரண்டு வகையான கருத்து அருளிச்செய்தவாறு.

4. ‘இந்தக் குலதர்மத்துக்கு’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
  பகவானிடத்தில் பிராவண்யம் இந்தக் குலத்துக்குத் தர்மம்
  ஆகையாலே நான் செய்ததில் தவறு உண்டோ? என்பது. அப்படி,
  பகவானிடத்தில் பிராவண்யம் இந்தக் குலத்துக்குத் தர்மமோ? என்ன,
  ‘தர்மந்தான்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பேராளன்’ என்று
  தொடங்கி. இது, பெரிய திருமொழி, 7. 4 : 4. “எவரேலும் அவர் கண்டீர்”
  என்பது, திருவாய்மொழி, 3. 7 : 1. இந்தத் திருப்பாசுரங்களில் பாகவதர்களைச்
  சிலாகிக்கையாலே குலதர்மம் என்பது சித்தம் என்றபடி.