பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
210

அன

கேட்டு வளர்ந்தவள் அன்றோ நான். 1தாம்தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ. 2புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ; கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்; இனித்தான், 4“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லாநின்றது; இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் - உங்களை அறியாவிட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள். இக்குடிக்கு 5முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு என்பாள்

_____________________________________________________

1. “அன்னைமீர்காள்! நான்” என்றதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார்
  ‘தாம்தாம்’ என்று தொடங்கி. ‘குற்றமாமித்தனையேயோ’ என்றது,
  குணமாமித்தனை அன்றோ என்றபடி.

2. “முனிவது எங்ஙனேயோ” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘புத்திரர்களாகவுமாம்’ என்று தொடங்கி. இதற்குச் சம்வாதம் காட்டுகிறார்
  ‘கூரத்தாழ்வார்’ என்று தொடங்கி. கூரத்தாழ்வார்-கூரத்தாழ்வானுடைய
  திருத்தந்தையார். நங்கையார்-கூரத்தாழ்வாருடைய திருத்தேவிகள். திருவடி
  சார்ந்தவாறே-இறந்தவாறே.

3. ஆழ்வான்-கூரத்தாழ்வான்.

4. “ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப்பிரஸ்தோத பிக்ஷுக:
   அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம்ஏகம் அநாபதி”

5. முற்றூட்டு-ஏகபோகம்; பூர்ண ஆகாரம்.