| New Page 2 
‘நங்கள் நம்பி’ 
என்கிறாள். 1சர்வேச்வரனை நோக்கிப் பல 
விரதங்களை நோற்றுப்பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது.
‘உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே 
அன்றோ. “நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது. ‘கோலம்’
என்கிற இது, நகரத்துக்கு வேண்டும் அலங்காரங்களையுடைத்தாயிருக்கும் என்று, திருக்குறுங்குடிக்கு 
விசேடணம் ஆதல்; அன்றிக்கே, நம்பியினுடைய அழகினைச் சொல்லுதல். தாம் அகப்படுவதற்கு வேண்டிய 
கல்யாண குணங்களால் நிறைவுற்று இருப்பவன் என்பாள் ‘நம்பியை’ என்கிறாள். அகப்படுத்துகைக்கு 
அழகு சீலம் முதலிய குணங்களால் அத்தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று, அகப்படுக்கைக்குரிய 
ஆசையால் இத்தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள். 2நீங்களும் 
நம்பியைக் கண்டன்றோ ஹிதம் சொல்லுகிறது என்பாள் ‘கண்ட’ என்கிறாள். காண்பதற்கு முன்னே 
மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள். 
தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி. மீட்கப் 
போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன, 3கைமேலே ஒரு முகத்தாலே தான் 
____________________________________________________ 
  
1. ‘முற்றூட்டு’ என்கைக்குக் காரணம் என்? என்ன, 
அதற்கு விடைஅருளிச்செய்கிறார் ‘சர்வேச்வரனை’ என்று தொடங்கி. பல விரதங்களை
 நோற்றுப் பெற்றவர்கள்-தேவகீ 
முதலானவர்கள். நம்பி-திருக்குறுங்குடி நம்பி.
 திருவயிறு வாய்த்தல்-கரு தரித்தல். பிரசித்தி 
மாத்திரமே அன்றி, இவருடைய
 திருவாக்கும் உண்டு என்கிறார் ‘நெடுங்காலமும்’ என்று தொடங்கி. 
இது,
 திருவிருத்தம், 37. “கண்ணன் குறுங்குடி” என்கிறபடியே, அங்கு நிற்கிறவன்
 கிருஷ்ணன் ஆகையாலே 
இது, இங்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை.
 
 2. ‘நீங்களும்’ என்றது, விஷய வைலக்ஷண்யத்தைக் கண்டிருந்தும் 
மீட்கப்
 பார்ப்பது பொருந்துவதாமோ? என்றபடி.
 
 3. 
‘கைமேலே ஒரு முகத்தாலே’ என்பன சிலேடை: கைமேலே
 திருக்கைகளின்மேலே இருக்கின்ற ஆழ்வாருடைய சேர்த்தி 
அழகிலே
 என்பது, நேர்பொருள். பிரத்யக்ஷமாக என்பது, தொனிப்பொருள். ஒரு
 முகத்தாலே-தாமரைக்கண்கள், 
செங்கனிவாய் இவற்றினுடைய அழகாலே
 என்பது, நேர்பொருள். ஒரே முகமாக என்பது, வேறும் ஒரு 
பொருள்.
 |