|
New Page 1
பொ-ரை :- தங்கள் தங்கள் முயற்சியால்
அறிய ஒண்ணாத பிரானும், சக்கரத்தை அழகிய கையிலே தரித்திருக்கின்றவனுமான சர்வேச்வரனையே பேசி,
வாசனை பொருந்திய சிறந்த மலர்களைத் தேடி, நல்ல திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச்செய்யப்பட்ட ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருக்குறுங்குடியதன்மேல் சொன்ன குறிகளைக்கொண்ட
இப்பத்துப் பாசுரங்களையும் அறியக் கற்று வல்லவர்கள் ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட இந்தப் பூலோகத்திலே
வைஷ்ணவர்கள் ஆவார்கள்.
வி-கு :- அலற்றி நாடி சொன்ன இவை
பத்து என்க. வல்லார் ஞாலத்துள்ளே வைட்ணவர் என்க.
ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைக்
கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே வைஷ்ணவர்கள் என்கிறார்.
அறிவு அரிய பிரானை-2நாம் பெறுதல்
இழத்தல் செய்கிறோம், தம் முயற்சியால் சாதித்துக்கொள்ளப்படுவது அன்றிக்கே ஒழியப்பெற்றோமே
முன்னம். 3வஸ்துதான் உண்டானால் நினைத்தபோது பெற்று அநுபவிக்கலாமே அன்றோ.
4இவர்கள் பின்னைத் தங்கள் முயற்சியாலே அறியுமவர்களோ? என்னில், ஆகவேணுமே அன்றோ,
‘மீட்கலாம்’ என்று இருந்தபோதே, ‘தங்கள் தங்களாலே அறியவுமாம்’ என்று இருந்தார்களாக
வேணுமே அன்றோ. ஆழி அம் கையனையே அலற்றி - “சங்கினோடும் நேமியோடும்” என்று, தொடங்கினபடியே
தலைக்கட்டுகிறார்.
____________________________________________________
1. திருப்பாசுரத்தின் நான்காம் அடியைக் கடாக்ஷித்து
அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. தாம் பெறாதிருக்கவும், அறிவரியனானமையைக்கொண்டு
“பிரான்”
என்கிறது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நாம் பெறுதல்’
என்று தொடங்கி.
3. தங்கள் தங்கள் முயற்சியால் சாதித்துக்கொள்ளப்படாதவனாக
இருப்பின்,
அதனால் தமக்கு இலாபம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வஸ்துதான்’
என்று தொடங்கி. என்றது, தங்கள் முயற்சியால்
சாதித்துக்கொள்ளப்படுமவன் அன்றிக்கே ஒழிந்தால்,
வஸ்துவின் உண்மைக்கு
அழிவில்லாமையாலே, நினைத்தபோது அநுபவிக்கலாம் என்றபடி.
4.
‘இவர்கள்’ என்றது, தாய்மார்களாகச் சொல்லப்படுகின்ற அத்யவஸாய
நிஷ்டரை.
|