பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
244

அவ

அவனைக் 1கைவிடாமல் அநுபவித்ததித்தனை இதற்கு முன்பெல்லாம்; இதில், 2கையும் திருவாழியுமான அழகையாயிற்று உருவச் சொல்லிக் கூப்பிட்டது. நறிய நன் மலர் நாடி-பரிமளத்தையுடைத்தாய் நன்றாயிருக்கிற 3மலர்களைத் தேடிக்கொண்டு, “அடிசூட்டலாகும் அந்தாமம்” என்னக்கடவதன்றோ. நன் குருகூர்ச் சடகோபன்-4இந்தக் காதல் உண்டாகைக்கு அடி அவ்வூரில் பிறப்பாயிற்று. குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்-ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு, நம்பியுடைய 5அழகினை மெய்காட்டுக்கொண்ட இப்பத்தும் திருக்குறுங்குடி விஷயம். அன்றிக்கே, 6திவ்விய ஆயுதங்களும் திவ்விய ஆபரணங்களும் சேர்ந்த சேர்த்தியாலுண்டான நம்பியுடைய அழகைத் திரளச்சொன்ன பத்தும் என்னுதல். அறியக் கற்று வல்லார்-இதனைக் கற்று அறிய வல்லவர். அறியக் கற்கையாவது, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நித்தியசூரிகள் நடுவே இருக்கிற இருப்பைக்காட்டிலும், திருக்குறுங்குடியில் நிற்கிற நிலையிலே குணாதிக்யம் உள்ளது

___________________________________________________

1. ‘கைவிடாமல்’ என்றது, சிலேடை: கையை விடாமல் என்றும், பிரியாமல்
  என்றும் பொருள்.

2. “ஆழி அம் கையனை” என்பது என்? “சங்கினோடும் நேமியோடும்”
   என்பது போன்றவைகளால் மற்றைய ஆழ்வார்களுடைய சேர்த்தி
   அழகினையும் இத்திருவாய்மொழியில் அநுபவிக்கவில்லையோ? எனின்,
   அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கையும் திருவாழியுமான’ என்று
   தொடங்கி. இதற்கு முன்பெல்லாம் - இத்திருவாய்மொழிக்கு முன்பெல்லாம்.
   அன்றிக்கே, இத்திருப்பாசுரத்திற்கு முன்பெல்லாம் என்னுதல். உருவ
   -இடையீடில்லாமல்.

3. ‘மலர்களை’ என்றது, மலர்கள் போன்று இருக்கின்ற சொற்களைக்
  குறித்தபடி. பாட்டுகள் மாலையாய் இருக்குமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் “அடிசூட்டலாகும்” என்று தொடங்கி. இது, திருவாய்.
  2. 4 : 11.

4. “நன்” என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இந்தக் காதல்’ என்று
   தொடங்கி.

5. “குறிகொள்” என்பதற்குப் பொருள், ‘அழகினை மெய்க்காட்டுக் கொண்ட’
   என்பது. மெய்காட்டுக்கொண்ட-தெளிவாக அறிவித்த.

6. “குறிகொள்” என்பதற்கு, “குறி” என்பது, ஆயுத ஆபரண ரூபசிந்நமாய்,
   அவற்றினுடைய சேர்த்தியால் வந்த அழகினைச் சொன்ன இப்பத்து என்று
   வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார் ‘திவ்ய ஆயுதங்களும்’ என்று
   தொடங்கி.