|
என
என்னுமிடத்தை அறிந்து
கற்க வல்லவர்கள். 1வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம்
எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம். ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் - 2மருபூமியான
சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்தியசூரிகளோடு ஒக்கச்சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின
நிலங்களில் வாசி அறியுமவர்கள்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
எங்ஙனே நீர்முனிவது
என்னைஇனி நம்பிஅழ
கிங்ஙனே தோன்றுகின்ற
தென்முன்னே - அங்ஙன்
உருவெளிப் பாடா
உரைத்த தமிழ்மாறன்
கருதுமவர்க்
கின்பக் கடல்.
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. வஸ்துவின் உயர்வுக்குக்
காரணம், குணாதிக்யம் மாத்திரந்தானோ? மேன்மை
வேண்டாவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வஸ்துவுக்கு’
என்று தொடங்கி. குணாதிக்யம்-சௌலப்யம் முதலான குணங்களின் மிகுதி.
2.
மருபூமி-நீரும் நிழலும் அற்ற நிலம்.
|