|
1
1“சர்வேச்வரனுடைய
குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒருசேதனன் முக்திதசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்”
என்றும், 2“பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாமதேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன்,
சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும், “என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின,
அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும், அவனாகப் பாவித்தால்
பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ. அப்படியே, 3விபூதி
அத்தியாயத்தில் அவன் சொன்னபடிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள். 4அதர்வ சிரஸ்ஸிலே,
சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது, இவன்
இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து, “ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்”
என்று, பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால்
அப்படியே சொல்லலாய் இருக்குமே.
____________________________________________________
1. “தத்பாவ பாவம் ஆபந்ந:
ததாஸௌ பரமாத்மநா
பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா
ஜ்ஞாந க்ருதோபவேத்”
என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.
2. அவனாகப் பாவித்தால்
அவன் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லலாயிருக்கும் என்பதற்கு, வேறு பிரமாணங்களையும்
அருளிச்செய்கிறார் ‘பிரஹ்மத்தை’ என்று தொடங்கியும்,
‘என்னிடத்திலிருந்து’ என்று தொடங்கியும்.
“தத் ஹிதத் பஸ்யந் ருஷி:
வாமதேவ: ப்ரதிபேதே அஹம்
மநுரபவம் ஸூர்ய: ச”
என்பது, பிரு. உபநிட. 3 : 4.
“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம்
மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய; அநந்த:
பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:”
என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 :
85.
3. ‘விபூதி அத்தியாயத்தில்
அவன் சொன்ன படிகளை’ என்றது, பகவத்கீதையில்
பத்தாம் அத்தியாயத்தில் 19-வது சுலோகம் முதல்
40-வது சுலோகம் முடிய
உள்ளனவற்றைத் திருவுள்ளம்பற்றி.
4. அவனாகப்
பாவித்தால் அவன் சொல்லும் வார்த்தையைச்
சொல்லலாயிருக்கும் என்பதற்கு, மற்றும் ஒரு பிரமாணம்
காட்டுகிறார்
‘அதர்வ சிரஸ்ஸிலே’ என்று தொடங்கி. இங்கே, நாலாம்பத்து ஈட்டின்
தமிழாக்கம்
417-ஆம் பக். காணல் தகும்.
|