|
1இங
1இங்கு, கால், நடைதாராமையாலே அங்குப்போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம்
அன்று, வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.
ஆக, 2‘பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே
பிறந்தவள், பிறப்பே ஸ்வதந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள், பெண்தன்மைக்கு எல்லையான
இவள், புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள், அறிவிற்கு 3விஷயம்
வியவஸ்திதமாக இருக்க, சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’ என்று கொண்டு,
இவள் செய்கிறபடிகளைத் திருத்தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.
4மேல் திருவாய்மொழியிலே,
உருவெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்கிரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ, அந்த விக்கரஹமே அன்றோ பற்றத்
தகுந்தது; இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்கிரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச்
சொல்லுகிறது; அதனை அன்றோ பாவித்தது. 5பாவனையின் மிகுதியாலே,
____________________________________________________
1. மற்றும் ஓர் ஆகாரத்தாலே வேறுபாட்டினைக்
காட்டுகிறார் ‘இங்கு’ என்று
தொடங்கி.
2. மேல், ‘அவனுடைய வார்த்தைகளைப்
பேசுகையால் வந்த ஒற்றுமையாலும்’
என்ற வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘பிறப்பே பரதந்திர
ஜன்மத்திலே’
என்று தொடங்கி.
3. ‘விஷயம் வியவஸ்திதமாக இருக்க’ என்றது,
சர்வேச்வரனே சர்வ
நிர்வாஹகன்’ என்று அறிவிற்கு விஷயம் முடிவு செய்யப்பட்டதாக
இருக்க
என்றபடி. வியவஸ்திதம் - முடிவு செய்யப்பட்டது. ‘சர்வஜ்ஞன் சொல்லும்
வார்த்தைகளை’
என்றது, “அஹம் க்ருத்ஸ்நஸ் ஜகத: பிரபவ:” என்பது
போன்ற வார்த்தைகளைத் திருவுள்ளம்பற்றி.
4. சுவாபதேசப் பொருள் அருளிச்செய்கிறார்
‘மேல் திருவாய்மொழியிலே’
என்று தொடங்கி. ‘அதனை’ என்றது, அந்த ஸ்வரூபத்தை என்றபடி.
5. அதனைப்
பாவித்தால் அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல
வேணுமோ? என்ன, தேஹாத்ம அபிமானிக்கு,
தேஹாத்ம அபிமானம்
முற்றினால், வேறு ஒன்று தோற்றாதது போன்று சரீரி அளவும் செல்லத்
தன்னை
அநுசந்திக்கும்படி பாவனை முற்றினால் அவன் சொல்லும்
வார்த்தைகளையும் சொல்லலாம் என்கிறார்
‘பாவனையின் மிகுதியாலே’
என்று தொடங்கி.
|