|
1ப
1பிரிவாற்றாமை
உண்டானால் அநுகரித்துத் தரிக்கக்கடவதன்றோ. ஸ்ரீகிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ திருவாய்ப்பாடியில்
பெண்கள்; “கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: - நான் கிருஷ்ணன், நடைச்சக்ரவத்துப்
பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள்
என்றாளே அன்றோ. துஷ்ட காளீய திஷ்ட அத்ர - ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய்
ஏறி ஆடினாளே அன்றோ;” 2பிரதிகூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை
அநுகரிக்கிற பெண்ணின் பொடிபடப்பெறில் என்று இருந்தாள்; கிருஷ்ணனானவள் தானும் இவளைக்
‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத் துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய்ப்பட்டாலே.
3அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்;
இவள் மயர்வறமதிநலம் அருளப்பெற்றவள் ஆகையாலே உபயவிபூதிகளையுமுடையவனை அநுகரிக்கிறாள்.
____________________________________________________
1. அநுகரித்துத் தரிக்க வேணுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பிரிவாற்றாமை’ என்று தொடங்கி. அதற்கு உதாரணம் காட்டுகிறார்
‘ஸ்ரீகிருஷ்ணனை’ என்று தொடங்கி.
“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா
இதமூசு: பரஸ்பரம்
க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம்
வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”
“அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய
மம கீதி: நிஸம்யதாம்
துஷ்டகாளீய திஷ்ட அத்ர
க்ருஷ்ண: அஹம் இதி ச அபரா”
என்பன, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 13 :
26, 27.
‘நடைச்சக்கரவத்துப்
பிடிக்க வேண்டும்படியாக’ என்றது, நடைச்
சக்கரவர்த்தி வந்தான்’ என்று விருது பிடிக்க
வேண்டும்படியாக என்றபடி.
2. விரோதியான காளியன்
ஆகலாமோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரதிகூலனான’ என்று தொடங்கி. கிருஷ்ணனாகத்
தன்னை அநுகரித்த பெண்ணானவள், துகைக்கலாமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘கிருஷ்ணனானவள்
தானும்’ என்று தொடங்கி.
3. ஆனால், அவர்களைப்
போன்று ஓர் அவதாரத்தை அநுகரியாமல்
பரத்துவத்தை அநுகரித்தது என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அவர்கள் ஓர் அவதாரத்திலே’ என்று தொடங்கி. இத்திருவாய் மொழியில்
வருகின்ற “கூந்தல் மலர்மங்கைக்கும்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி
‘உபயவிபூதிகளையுமுடையவனை’
என்கிறார்.
|