|
இட
பொ-ரை :-
செய்துகொண்டிருக்கின்ற காரியங்கள் எல்லாம் யானே என்னும், இனிமேல் செய்யப்படுவனவாக நிற்கின்ற
காரியங்களும் யானே என்னும், முன் செய்து கழிந்துபோன காரியங்களும் யானே என்னும், காரியங்களின்
பயன்களை அனுபவிக்கின்றவனும் யானே என்னும், அந்தக் காரியங்களைச் செய்கின்றவர்களைப் படைக்கின்றவனும்
யானே என்னும், செந்நிறம் பொருந்திய தாமரை போன்ற திருக்கண்களையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ?
நன்மை அல்லது அறியாத இந்த உலகத்தார்க்கு, சிவந்த கோவைக்கனி போன்ற இளமை பொருந்திய
மான் போன்ற இப்பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுவேன்?
ஈடு :- நான்காம்
பாட்டு. முக்காலத்திலும் உண்டான காரியங்களின் கூட்டம் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.
செய்கின்ற
1கிதி எல்லாம் யானே என்னும், செய்வான் நின்றனகளும் யானே என்னும், செய்து முன் இறந்தவும்
யானே என்னும் - நிகழ்காலத்தில் நடக்கும் காரியக்கூட்டம், செய்யக்கடவதாய் நிற்கிற காரியக்கூட்டம்,
முன்பு செய்துபோன காரியக்கூட்டம் இவை அடைய நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். செய்கைப்
பயன் உண்பேனும் யானே என்னும் - 2“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய
கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னாநின்றாள். அன்றிக்கே, கிரியைகளின் பலன்களை
அநுபவிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல். அன்றிக்கே, செய்கையாகிற
கிரியையும், பலத்தை அநுபவிக்கின்றவனும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்னுதல். செய்வார்களைச்
____________________________________________________
1. “கிதி” என்பது
கிருதியாய், கிரியையைச் சொல்லுகிறது, கிரியை - செயல்.
2. “செய்கைப்பயன் உண்பேனும்
யானே என்னும்” என்பதற்கு, மூன்று
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். அவற்றில், முதற்
பொருளை
‘நானே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம்
போக்தாச ப்ரபுவே ச
நது மாம் அபிஜாநந்தி தத்வேந
அத: ச்யவந்தி தே”
என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.
‘நித்திய
கர்மங்களின் பயனை’ என்றது, ஹ்விஸ்ஸினை. ‘கிரியைகளின்
பலன்களை அனுபவிக்கின்றவர்கள்’ என்றது,
சுவர்க்கம் முதலான பலன்களை
அநுபவிக்கின்றவர்கள் என்றபடி.
|