|
தன
தன்னை - 1“உலகங்கட்குத்
தலைவனாகிய இறைவன் இலக்குமியோடு கூடி எழுந்தருளியுள்ளான்” என்கிறபடியே, இவர்களுக்குப் பதியாயுள்ளவனை.
இதனால், ஓர் அவதாரமாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே அநுகரிக்கிறார்
என்று தோற்றி இருக்கிறபடி. வாய்ந்த - வாய்க்கையாவது, கிட்டுகை. 2அநுகாரத்தாலே
கிட்டின படியை நினைக்கிறது. குற்றேவல் செய்து-ஆழ்வார், திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று
இவைதாம். என்றது, 3வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று என்றபடி.
நன்று; அநுகாரம்
அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே. 4அவன்
உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம். ‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி
சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும், அது அடிமையாய்த் தலைக்கட்டுமித்தனை.
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் - ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை
ஆயிரத்திலும் இப்பத்தைக் கற்க வல்லவர்கள். உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் - 5இந்த
உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ
___________________________________________________
1. ஸ்ரீபூமி நீளைகளோடே கூடி
இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘உலகங்கட்கு’ என்று தொடங்கி. “வைகுண்டேது பரேலோகே
ஸ்ரீயா
ஸார்த்தம் ஜகத்பதி:” என்பது. இங்கு, ‘இலக்குமியோடு கூடி’ என்றது, பூமி
நீளைகளுக்கும்
உபலக்ஷணம்.
2. பிரத்யக்ஷமாகக் கிட்டினாரோ?
என்னில், ‘அநுகாரத்தாலே’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று’
என்றது, அநுகாரமுகத்தாலே
வாசிகமாக அடிமை செய்தபடி ஆயிற்று என்றபடி.
4. கொள்கிறவன் கருத்தாலே
அடிமையாம் பிரகாரம் யாது? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘அவன் உகப்பே’ என்று தொடங்கி.
இது,
அவனுக்கு உகப்பான படியைக் காட்டுகிறார் ‘நம்முடைய பிரிவில்’ என்று
தொடங்கி.
5. “ஏந்து” என்றதற்கு, இரண்டு பொருள் அருளிச்செய்கின்றார். ஒன்று,
எல்லாராலும் கொண்டாடப்படுதல். மற்றொன்று,
முகந்து எழுபானை
போன்று மேலும் மேலும் பெருகிவருதல் என்பது. இந்த இரண்டு
பொருளையும் முறையே
அருளிச்செய்கிறார் ‘இந்த உலகத்தில் என்று
தொடங்கி.
|