பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
277

New Page 1

வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய். அன்றிக்கே. 1“நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்” என்கிறபடியே, உலகத்திலே முகந்தெழுபானையான எல்லையில்லாத செல்வத்தையுடையராய்க் கொண்டு என்னுதல். திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே - ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப்பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப்பாசுரங்களைச் சொல்லுகை. 2“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்” என்னக் கடவதன்றோ.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே
        உடனா அநுகரிக்க லுற்றுத் - திடமாக
        வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாற னுரையதனை
        ஆய்ந்துரைப்பார் ஆட்செய நோற்றார்.

(46)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

___________________________________________________

1. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
  தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
  மின்னையே சேர்திகிரி வித்துவக் கோட்டம்மா!
  நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே.

  என்பது, பெருமாள் திருமொழி.

      முகந்தெழுபானை - தண்ணீரை முகந்துகொண்டு மேலே எழுகின்ற
  ஏற்றப்பானை.

2. இப்பாசுரங்களைச் சொன்னால் அவர்கட்கு உகப்பு ஆகுமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தொண்டர்க்கு’ என்று தொடங்கி. இது,
  திருவாய்மொழி, 9. 4 : 9.