பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
278

ஏழ

ஏழாம் திருவாய்மொழி - “நோற்ற நோன்பு”

முன்னுரை

    1மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப்பார்த்தார்; ‘அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்? தன்பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன் நம்பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்; ‘இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது; ‘அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து, தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார். 2கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், 3“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க, ஸ்ரீவிபீஷணாழ்வான் 4“கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று

____________________________________________________

1. மேல்திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தவர்,
  இத்திருவாய்மொழியில் “நோற்ற நோன்பிலேன்” என்று கூறுவதற்கு அடி
  யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்யுமுகத்தால், மேல்
  திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்கிறார்
  ‘மேல்திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. ‘ஆற்றாமையுண்டாயிருந்தது’
  என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற “ஆற்றகிற்கின்றிலேன்”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’
  என்றது, ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட
  தியானம் பக்தியாகையாலே, இது உபாயமாகவேணும்
  என்றிருந்தானாகவேணும் என்றபடி.

2. திருஷ்டாந்த முகத்தால் அதனை விரித்து அருளிச்செய்கிறார் ‘கடற்கரையின்’
  என்று தொடங்கி.

3. “லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.

4. ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர:
  தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:”

 
என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.