|
கர
கர்மயோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்”
என்கிற இடத்தில், ‘தர்மம் இல்லை’ என்னாமல், தர்மநிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றாற்போலே,
‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது, 1ஆத்ம
ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவையுடையேனல்லேன் என்றபடி.
“ந பக்திமான்”
என்றும், 2“நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு 3இங்கும்
எடுத்துக்கழியாது ஒழிவான் என்? என்னில், 4“கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட
மனத்தையுடையவனுக்கு” என்கிறபடியே, அவை இரண்டும் உண்டானால் வருமதுவேயன்றோ பக்தி; அவை இல்லாமையாலே
எடுத்துக்கழிக்கவும் வேண்டாவே அன்றோ. ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற
போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ, அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்?
என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால் அடுத்த பிறவியிலே ஞானம்
உண்டாகக் கடவது. 5ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில், ஞானகர்மங்கள்
இரண்டும் உண்
_____________________________________________________
1. “நுண்ணறிவு” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஆத்ம ஞானம்
முன்னாக’ என்று தொடங்கி.
2. குளித்து மூன்றனலை
யோம்பும் குறிகொள்அந் தணமைதன்னை
ஒளித்திட்டேன் என்க
ணில்லை; நின்கணும் பத்தனல்லேன்;
களிப்பதென் கொண்டு?
நம்பி! கடல்வண்ணா! கதறு கின்றேன்;
அளித்தெனக் கருள்செய்
கண்டாய் அரங்கமா நகருளானே.
என்பது, திருமாலை, 25.
3. ‘இங்கும்’ என்றது,
“நோற்ற நோன்பிலேன்” என்ற இத்திருப்பாசுரத்திலும்
என்றபடி.
4. “உபய பரிகர்மித
ஸ்வஅந்தஸ்ய ஏகாந்தி காத்யந்திக
பக்தியோகைகலப்ய:”
என்பது, ஆத்மசித்தி.
5. முற்பிறவியில்
அடையப்பட்ட கர்ம ஞானங்களாலே அடுத்த பிறவியில்
பக்தியும் உண்டாகலாமே, ஆன பின்பு,
அவையுடையவனுக்கே பக்தி
விலக்குதலையும் செய்யலாமே? என்று சங்கித்துப் பரிஹரிக்கிறார்
‘ஆயின்,
பக்தியும்’ என்று தொடங்கி. ‘பக்தியும் அப்படியானாலோ’ என்றது,
முற்பிறவியிலே
கர்ம ஞானங்களை அநுஷ்டித்து, இந்தப் பிறவியிலே பக்தி
உண்டானாலோ என்னில் என்றபடி.
|