|
ட
டானால் 1பக்தி கூடி அல்லது நில்லாது,
ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது. 2‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’
என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ, 3“சிநேகத்தை முன்னிட்ட தியானமானது
பக்தி” அன்றோ; ஆனபின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ, கரும ஞானங்களோடு
கூடியுள்ள மனத்தையுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ சாஸ்திரங்களில் சாதனமாகச்
சொல்லிப் போருகிறது; இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே
இது ஸ்வரூபமாமித்தனை. 4அங்ஙன் அன்றிக்கே, புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச்
சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.
5அவை இல்லையாகில், முதல் இல்லாதார்
பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன, ஆகிலும் - இங்ஙனம்
____________________________________________________
1. ‘பக்தி கூடியல்லது நில்லாது’ என்றது,
“பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும்,
“ஞானம் கனிந்த நலம்” என்றும் சொல்லுகிறபடியே, ஞானத்தின்
பரிபாகம்
பக்தியாகையாலே, ஞானம் பக்தியோடும் கூடியதாகவே இருக்கும் என்றபடி.
2. ஜிஜ்ஞாஸு பிரச்நத்தை அநுவதிக்கிறார்
‘உன்னை விட்டு’ என்று தொடங்கி.
3. “ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி
அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி
ஸப்தேந பூயஸீ”
4. “பக்தியானது, கர்ம ஞானங்களை அங்கமாகக்
கொண்டு தான்
அங்கியாயிருக்கும்” என்கிற வேதாந்தப் பிரக்கிரியையை மேற்கொண்டு
அருளிச்செய்தார்
இதுகாறும். இனி, கர்மம் ஞானம் முதலானவற்றைத்
தனித்தனியே சாதனமாகச் சொல்லுகிற புராணப் பிரக்கிரியையை
மேற்கொண்டு அருளிச்செய்கிறார் ‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி.
இந்தப் பக்ஷத்தில்,
இத்திருப்பாசுரத்தில், கர்ம ஞானங்கள் இல்லாமையைச்
சொன்னது, பக்தி இல்லாமைக்கும் உபலக்ஷணம்:
“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண
பரதாதிஷு
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத
ப்ரமுகாஸ்ரயா”
என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.
5. “சாதனம்
இல்லையாகில் சாத்யமும் இல்லை” என்றதனை உட்கொண்டு
அருளிச்செய்கிறார் ‘இவை இல்லையாகில்’
என்று தொடங்கி. பலிசை - வட்டி.
|