|
இ
இருந்தேயாகிலும்.
1‘ஆற்றகிற்கின்றிலேன்’ என்னுமிதனை, ‘உபாயம்’ என்றிருந்தாராகில்,
‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை. ஆனால், நீர் இந்நாள்வரை ஆறி இருந்தீரே? என்ன,
இனி-2உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ, உன்
நிறைவும் என்குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ? 3ஒருவன் கையிலே சோறும்
உண்டாய் அவன் இடுவானுமானால், ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி - 4என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
5ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
6அநாதி காலம் மெய்மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும்
இழக்க வேண்டுமோ?
____________________________________________________
1. “ஆற்றகிற்கின்றிலேன்”
என்கிற பகவத் பிரசாதம் அடியாக வந்த பக்தி
தானே சாதனம் ஆனாலோ? என்னில், அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘ஆற்றகிற்கின்றிலேன் என்னுமிதனை’ என்று தொடங்கி. என்றது, “ஆகிலும்”
என்ற பதம் பயன் அற்றதாய்விடும் என்றபடி. அதாவது, “வேறு உபாயங்கள்
தமக்கு இல்லை” என்று
அருளிச்செய்யக்கூடாது என்றபடி.
2. திருப்பாசுரத்தில் மேலே
உள்ள பதங்களையும், இனி வருகின்ற “அரவின்
அணை அம்மானே” என்றதனையும் கடாக்ஷித்து, “இனி” என்ற
பதத்துக்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘உன்னையும் அறியாதே’ என்று தொடங்கி.
இதனை, விவரணம்
செய்கிறார் ‘உன் நிறைவும்’ என்று தொடங்கி.
3. நிறைவில்லாதவனுக்கு நிறைவுள்ளவன்
செய்ய வேணுமோ? என்ன, செய்ய
வேண்டும் என்னுமதனை லௌகிக திருஷ்டாந்தத்தாலே காட்டுகிறார்
‘ஒருவன்’ என்று தொடங்கி.
4. “நோற்ற நோன்பிலேன்
நுண்ணறிவிலேன்” என்றதனை மட்டும் கடாக்ஷித்து
“இனி” என்றதற்கு, வேறு ஒரு வகையில் பாவம்
அருளிச்செய்கிறார் ‘என்
கையிலேயும்’ என்று தொடங்கி.
5. ‘ஒன்றும் இல்லை’ என்கிறது
என்? “ஆற்றகிற்கின்றிலேன்” என்கிற பக்தி,
உபாயம் ஆனாலோ? என்று ஈச்வரனுடைய அபிப்பிராயமாக
அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபத்தை’ என்று தொடங்கி.
6.
“அரவின் அணை அம்மானே” என்பதற்கு, இரண்டு வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார் மேல்: முதற்பொருள்,
அரவை அணையாக உடையனாந்
தன்மை சர்வாதிக லக்ஷணமாகையாலே பூர்த்தி சொல்லுகிறது என்பது.
‘அரவின் அணை’ என்றதனால், சேஷசாயி ஆகையாலே பரமபோகியாய்
இருப்பவன் என்றும், ‘அம்மானே’
|