|
இ
உன்னைவிட்டு - 1நீயும்
என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ
இருக்கிறது. அன்றிக்கே, 2உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம். ஒன்றும்
ஆற்றகிற்கின்றிலேன் - 3உன்னுடைய ஸ்வரூபஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய்
இருக்கிறதில்லை. 4“அங்ஙனம்
அழைத்துக்கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே
அன்றோ அவளுக்கு. கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு.
இதுகாறும் தம்முடைய நிறைவின்மையைச் சொன்னார்; இனி, அவனுடைய பூர்த்தியைச் சொல்லுகிறார்:
அரவின் அணை
_____________________________________________________
என்றதனால் சரீரியாக இருப்பதனாலே சேஷியாக
இருப்பவன் என்றும்
கூறுவது இரண்டாவது பொருள். இந்த இரண்டாவது பொருளைக் கடாக்ஷித்து,
“இனி” என்பதற்கு, மூன்றாவதாக வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார்.
‘அநாதி காலம்’ என்று
தொடங்கி. ‘மெய்மறந்து’ என்பது, சிலேடை:
சரீரசரீரிபாவசம்பந்தத்தை மறந்து என்பது, நேர்
பொருள். உடம்பு தெரியாதே
மோஹித்து என்பது, வேறும் ஒரு பொருள். ‘மெய்யாக’ என்பதும்
சிலேடை:
சரீரமாகையாலே சேஷம் என்பது, நேர்பொருள். சத்தியமாக என்பது, வேறும்
ஒருபொருள்.
1. “அரவின் அணை அம்மானே” என்றதற்கு,
மேற்கூறிய இருவகைப்
பொருள்களுள் முதற்பொருளைக் கடாக்ஷித்து, “உன்னை” என்பதற்குப்
பூர்ணனான
உன்னை என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி,
பாவம் அருளிச்செய்கிறார் ‘நீயும்
என்னைப் போலே’ என்று தொடங்கி.
2. “அரவின் அணை அம்மானே” என்றதற்குக்
கூறிய இருவகைப்
பொருள்களுள், இரண்டாவது பொருளைக் கடாக்ஷித்து, அதற்குத்
தகுதியாகப் போக்யனான
உன்னை என்று வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘உயிரை விட்டு’ என்று தொடங்கி.
3. “ஒன்றும்” என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘உன்னுடைய’
என்று தொடங்கி.
4.
பிராட்டிக்கு, ஸ்வரூபஞானம் தரித்திருப்பதற்குக் காரணமாய் இருந்ததே?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அங்ஙனம்’ என்று தொடங்கி.
‘அங்ஙனம்’ என்று தொடங்கும் பொருளையுடைய
சுலோகத்தை மேலே
காணல் தகும். வழியாவது, முறைப்படி விரோதியை அழிக்க
வேண்டியிருத்தல். விரைவு உண்டாயிருக்கச் செய்தே பிராட்டி
ஆறியிருந்ததற்கும், இவள் ஆறியிராமைக்கும் காரணம்
யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி.
|