|
அல
அல்லேன். இங்குற்றேன்
அல்லேன் - 1இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன்
அல்லேன். 2அன்றிக்கே, “சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்கிறபடியே,
உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன் -
3“மறந்தேன் உன்னை முன்னம்” என்கிறபடியே, உன்னை மறந்து, “அவர் தரும் கலவியே கருதி”
என்கிறபடியே, அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் என்னுதல். 4யாதானும் பற்றி நீங்கும்
விரதத்தை நல்வீடு செய்கையாலே அப்படி இருக்கமாட்டாரே. உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து
யான் எங்குற்றேனும் அல்லேன்-5ஆனால், ஒரு காலத்திலாகிலும் சில செய்ய வல்லீரோ?
என்னில், அது, முன்பே தானே
____________________________________________________
1. ஆரப்தயோகர் படி தமக்கு
இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று
தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன
அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த
ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல்
திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்”
என்று
சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில் “அங்குற்றேன்
அல்லேன் இங்குற்றேன் அல்லேன்”
என்று வேறு வகையாக
அநுபாஷிக்கிறார் என்பதாம்.
2. “அங்குற்றேன் அல்லேன்
இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு, மற்றும்
ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி.
“ஸஉத்தம : புருஷ : ஸதத்ர
பர்யேதி ஜக்ஷத்கிரீடந் ரமமாண:
ஸ்திரீபிர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபிர்வா ந உபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”
என்பது, சாந்தோக்யம், 8. 12 : 3.
3. “மறந்தேன் உன்னை முன்னம்”
என்பது, பெரிய திருமொழி, 6. 2 : 2. “அவர்
தரும் கலவியே” என்பது, மேற்படி 1. 1 : 1.
4. இதர விஷயமே அடையத் தகுந்தது
என்று இருந்தாலோ? எனின் அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘யாதானும் பற்றி’ என்று தொடங்கி.
என்றது,
இவ்வுலக இன்பங்களில் ஏதேனும் ஒன்றனைப் பற்றிப் பகவத் விஷயத்தை
விட்டே போம்படியான
இந்தச் சம்சாரி சேதனனுடைய நினைவானது
மீண்டும் தொடராதபடி அதனை நன்றாக விடுவிக்கையாலே என்றபடி.
இது, திருவிருத்தம், 95-ஆம் பாசுரம்.
5.
“அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு
அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள்,
முதற்
|