பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
290

New Page 1

“உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” என்று சொன்னேனே அன்றோ. 1ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்கள் அதற்கு ஆற்றல் உள்ளவராய் இருக்க வேண்டும் அன்றோ. ‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன். ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம். அங்குற்றேன் அல்லேன் - 2நித்தியசூரிகளோடுகூட அங்கே இருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன். 3இங்ஙனே ஆனால், நீ வந்து முகங்காட்டுமளவும் நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் - 4“ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து கரையேறமாட்டாதே தடுமாறாநின்றேன்.

____________________________________________________

  பொருளுக்குத் தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘ஆனால்’
  என்று தொடங்கி. ‘ஆனால்’ என்றது, ஆருடயோகரும் ஆரப்தயோகரும்
  அல்லீராகில் என்றபடி. ‘செய்ய வல்லீரோ’ என்றது, சாதனங்களை
  அநுஷ்டிப்பதற்கு யோக்கியதைதான் உமக்கு உண்டோ? என்றபடி.

1. “நம்மை விட்டுத் தரிக்க மாட்டீர்” என்றால், “யோக்கியதை இல்லை”
  என்னுமதற்கு, அது ஒரு காரணமாமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஒரு காரியத்தை’ என்று தொடங்கி. என்றது, “காலாழும்”
  (பெரிய திருவந்.) என்றபடியே, பக்திபாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
  மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன் என்றபடி.

2. பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு
  வகையர்; அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார் என்று
  பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி, அதனை அருளிச்செய்கிறார்
  ‘நித்தியசூரிகளோடுகூட’ என்றது முதல், ‘பொறாதவனாக இருக்கிறேன்’
  என்றது முடிய.

3. நித்தியசூரிகளிலும் சம்சாரிகளிலும் கூட்டு அன்றிக்கே, வேறுபட்டவரானால்
  ஸ்வரூப ஞானத்தாலே தரித்திருந்தாலோ? என்ன, அதற்கு, விடை
  அருளிச்செய்கிறார் ‘இங்ஙனேயானால்’ என்று தொடங்கி. என்றது,
  பக்திபாரவஸ்யத்தாலே, “சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று
  ஆறியிருக்கப் பொறுமையுடையவனல்லேன் என்றபடி. இதனால், திருப்தப்
  பிரபந்நன் அல்லேன் என்றபடி.

4. பெரிய திருமொழி, 4 : 9 : 3.