பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
292

அன

அன்றோ கூட நிற்கிறது என்கிறார். 1இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ. பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு. பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது. 2நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ, நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ, உனக்குப் பரிகரம் இல்லாமையோ, பரிகரம்தான் கைகழிய நின்றோ, எதனாலேதான் இழக்கிறது? என்ன, அவை எல்லாம் அப்படியே, இத்தலை இப்படிக் குறைவற்றிருந்தாலும் பிரயோஜனம் இல்லையே, 3அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே? என்ன,

    தமியேனுக்கு - இத்தலையும் குறைவற்றது என்கிறார். 4அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். 5இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே. தமியேனுக்கு-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. 6ஸ்வரூபத்தைச்

____________________________________________________

1. “சங்குசக்கரத்தாய்” என்று, நிரூபகமாகச் சொன்னதற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘இங்கு’ என்று தொடங்கி.

      “சாபமாநய ஸௌமித்ரே” என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
  சுலோகத்திலுள்ள “ஸௌமித்திரே” என்ற சொல்லுக்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பிறர்கை’ என்று தொடங்கி. “சாபமாநய” என்ற
  சொல்லுக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பரிகரங்களை’ என்று தொடங்கி.
  பரிகரங்கள் - ஆயுதங்கள், உபகரணங்கள்.

2. மேலே கூறியவற்றைக் கடாக்ஷித்து, மேலுக்கு அவதாரிகை
  அருளிச்செய்கிறார் ‘நீ அண்மையில்’ என்று தொடங்கி. “சிரீவரமங்கல
  நகருறை” என்றதனை நோக்கி ‘நீ அண்மையில்’ என்று தொடங்கியும்,
  “இலங்கைசெற்ற அம்மானே” என்றதனை நோக்கி ‘ஆற்றலுடையவன்’
  என்று தொடங்கியும், “சங்குசக்கரத்தாய்” என்றதனை நோக்கி
  ‘உனக்குப்பரிகரம்’ என்று தொடங்கியும், அதனை நிரூபகமாகச்
  சொன்னதனை நோக்கிப் பரிகரம்தான்’ என்று தொடங்கியும்
  அருளிச்செய்கிறார்.

3. ‘அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே’ என்றது, உமக்கு இச்சையும்
   உண்டாகவேணுமே என்றபடி.

4. “அங்குற்றேனல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்றதற்குக் கூறிய
   இரண்டாவது பொருளுக்கு அநுகுணமாகத் “தமியேன்” என்பதற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘அங்கே’ என்று தொடங்கி.

5. இங்குள்ள சம்சாரிகளுக்குப் பிரிவு இல்லாமை எப்படி? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இங்குள்ளார்க்கு’ என்று தொடங்கி.

6. “தமியேன்” என்பதற்கு, உபாயசூந்யனான எனக்கு என்று பொருள்கூறத்
   திருவுள்ளம்பற்றி, ‘உபாயசூந்யன்’ என்று சொல்லு