பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
293

New Page 1

‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. 1நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ. தமியேன்-2பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை. ஆயின், செய்யவேண்டுவது என்? என்ன, அருளாயே - 3என் வெறுமையும் உன்நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, 4அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ. 5ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது. 6நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

(2)

_____________________________________________________

  வான் என்? “அவாவில் வீழ்ந்து” என்கிற பக்தி உபாயம் ஆனாலோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்வரூபத்தை’ என்று தொடங்கி.

1. ஸ்வரூபத்தைச் சாதனம் என்று செலவு எழுத ஒண்ணாதோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘நீ உபாயமானாலும்’ என்று தொடங்கி. ஆக,
  வேறு சாதனங்கள் ஒன்றும் இல்லாதவன் என்றபடி.

2. “இலங்கை செற்ற அம்மானே” என்றதனைக் கடாக்ஷித்து, “தமியேன்”
   என்பதற்கு, சம்சாரிகளில் தமக்கு ஒரு துணை இல்லாதவர் என்று
   மூன்றாவதாக ஒருபாவம் அருளிச்செய்கிறார் ‘பிராட்டியில்’ என்று
   தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார் ‘அங்காகில்’ என்று தொடங்கி.
   ஆக, “தமியேன்” என்பதற்கு, பிரிந்திருக்கிற எனக்கு என்றும்,
   உபாயசூந்யனான எனக்கு என்றும், சம்சாரிகளில் துணை இல்லாத எனக்கு
   என்றும் மூன்று பொருள் அருளிச்செய்தபடி.

3. “சங்குசக்கரத்தாய் தமியேன்” என்றதனைக் கடாக்ஷித்து, “அருளாய்”
   என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘என்வெறுமையும்’ என்று தொடங்கி.
   என்றது, இப்படி அருளின நீ பேற்றுக்குத் தகுதியாகவும் அருள வேண்டும்
   என்றபடி. ‘அடியில் தந்த அருள்’ என்றது, மயர்வற மதிநலம் அருளினதைக்
   குறித்தபடி.

4. மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘அன்று நான்’ என்று தொடங்கி.
  ‘அன்று நான் விரும்பாதிருக்க’ என்றது, “மயர்வற மதிநலம் அருளினன்”
  என்றவிடத்தில், ‘எனக்கு’ என்று கூறாமையைத் திருவுள்ளம் பற்றி.

5. யோக்கியதையைப் பிறப்பித்தால், பேற்றினையும் செய்து தரவேண்டுமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ருசியை யுண்டாக்குவார்’ என்று
  தொடங்கி.

6. “தமியேனுக்கு அருளாய்” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘நின்னருளே’ என்று தொடங்கி.