|
க
கருத்தாவானால் சாஸ்திரம்
பயனுடைத்தாம்.” “சாஸ்திரம் பயனுடைத்தாம்போது ஆன்மா கருத்தாவாகவேணும்” என்றபடி அருள் பெறுவார்
பக்கலிலும் சிறிது உண்டாக வேணும் காணும் என்ன, இது மேலுற்றைக் கிட்ட மரியாதையோ! கீழுற்றைக்கும்
ஏதேனும் உண்டோ; ஆன பின்னர், இத்தலையில் கிஞ்சித்காரத்தை விட்டு உன் கிருபையாலே செய்தருளாய்
என்கிறார். இவ்வளவும் வர இதற்கு முன்பு நீ நிர்ஹேதுகமாக ஏற்றுக்கொண்ட பின்பு, மேலும் செய்தருளவேணும்
என்கிறார்.
கருளப்புட்கொடி .
. . . . . . . . . அடிமைகொண்டாய் - 1நீ முன்பு அருளிற்று உன்னை அறிந்தோ, என்னை
அறிந்தோ! கருளப்புட்கொடி - பெரிய திருவடியைக் கொடியாகவுடையவனே! 2இன்னமும் ஒன்று
வேண்டும்படியோ உன்னுயர்த்தி. 3“அருளாழிப்புள்” அன்றோ. சக்கரப்படை - அதுவும்
வரவேண்டும்படியோ இது இருக்கிறது. 4“அருளார் திருச்சக்கரம்” அன்றோ. வான நாட -
5ஒன்று எடுக்கவும் ஒன்று பிடிக்கவும் வேணுமோ, இருப்பிடமே அமையாதோ. 6ஆக,
பெரிய திருவடியைக் கொடியாகவும், திருவாழியை ஆயுதமாகவும், பரமபதத்தை வசிக்குமிடமாகவும்
உடையையாய் வைத்து என்றபடி. பெரிய திருவடியை மேற்கொள்ளுதல்,
____________________________________________________
1. “அடிமைகொண்டாய்” என்பது
முடிய, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ
முன்பு’ என்று தொடங்கி. ‘அறிந்தோ’ என்ற ஓகாரத்திற்குக்
கருத்து,
உன்பெருமையையும் என்சிறுமையையும் பாராதே முன்பு நீர்ஹேதுகமாக
அடிமை கொண்டாற்போலே,
பேற்றினையும் உன்கிருபையாலே செய்தருள
வேண்டும் என்கிறார் என்பது.
2. “கருளப்புட்கொடி” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இன்னமும்’
என்று தொடங்கி என்றது, கருடக்கொடியே உன் பெருமைக்கு நிரபேக்ஷ
சாதகம், சக்கரத்தைத் தரித்தலும் பரமபதத்தில் இருத்தலும் மிகை என்றபடி.
3. மேலே, மேன்மைக்குக்
காரணமாக அருளிச்செய்து, இங்கே நீர்மைக்குக்
காரணமாக அருளிச்செய்கிறார் “அருளாழிப்புள்” என்று
தொடங்கி. இது,
திருவாய். 1. 4 : 6.
4. “அருளார் திருச்சக்கரம்”
என்பது, திருவிருத்தம்.
5. மேலே கூறிய இரண்டனையும்
கடாக்ஷித்து, ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘ஒன்று எடுக்கவும்’ என்று தொடங்கி.
6. மேலே மேன்மைக்குக்
காரணமாகச் சொன்ன அர்த்தத்தை விவரணம்
செய்கிறார் ‘ஆக’ என்று தொடங்கி.
|