பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
296

த

திருவாழியைச் சலியாமல் பிடித்தல், பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாதல் இவை அறப் பெரியவனுக்கு இலக்கணம்; 1இவை ஓரொன்றே அமைந்திருக்க எல்லாவகையாலும் நிறைந்தவனாயிருக்கிறபடி.

    “புள்” என்பது, பொதுப்பெயர்; 2“கருப்புள்” என்பது, கருடனாகிய பறவை என்று சிறப்பித்தபடி. “ஈடே” என்றதனை, “ஈளே” என்னுமாறு போலே, கருடன் என்பது ‘கருளன்’ என வந்தது. அன்றிக்கே, ‘கருள்’ என்று கறுப்பாய், அது சீற்றமாய், பகைவர்கள் மேலே சீற்றத்தையுடையவன் என்னுதல். 3“கருளுடைய பொழில் மருதும்” என்னக்கடவதன்றோ. எம் கார்முகில் வண்ணா-என்பக்கலிலே ஒளதார்யத்தைச் செய்தவனே! 4பெரிய உன் உயர்த்தி பாராவிட்டால் ஒளதார்யம் செய்கிற இடத்தைத்தான் பார்த்தாயோ. என்னளவு பாராதே பிரயோஜனத்தில் விருப்பமில்லாமல் செய்தபடி. செய்த ஒளதார்யம் ஏது? என்ன,

    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி-வஸ்து முன்பே உண்டாய், அதற்கு ஓர் உயர்வினைச் செய்துவிட்டாயோ; 5“இறைவனைப் பற்றிய ஞானமில்லாதவன் இல்லாதவனாக ஆகிறான்” என்று அன்றோ அங்கீகாரத்திற்கு முன்பு இருந்தது, இப்போது ஒரு வஸ்துவாக்கி, “இறைவனைப் பற்றிய ஞானமுள்ளவனை உள்ளவன் என்று அறிகிறார்கள்” என்று உஜ்ஜீவிக்கும்படி செய்தாய்.

____________________________________________________

1. ஒன்றனைச் சொல்லுதலே போதியதாக இருக்க, மூன்றனையும்
  சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவை ஓர் ஒன்றே’ என்று
  தொடங்கி.

2. கருளப்புள் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

3. பெரியாழ்வார் திருமொழி, 4, 9 : 3.

4. “எம்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பெரிய உன்’ என்று
   தொடங்கி. அதனை, விவரணம் செய்கிறார் ‘என்னளவு பாராதே’ என்று
   தொடங்கி.

5. ஆனால், இவர் வஸ்து அலரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இறைவனைப் பற்றிய’ என்று தொடங்கி.

  “அஸந்நேவஸபவதி அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்
  “அஸ்திபிரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது:”

 
என்பது, தைத்திரீய. ஆனந். 6.