பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
297

அ

அடிமை கொண்டாய் - 1“பெருமக்கள் உள்ளவர்” என்கிறபடியே, நித்தியசித்தர் செய்யக்கூடிய கைங்கர்யத்தை அன்றோ என்னைக் கொண்டது. 2உண்டாக்கின அளவேயோ, ஜீவனமும் இட்டிலையோ என்கிறார். “கார்முகில்” என்றது, பலித்தபடி. ‘அடிமை கொண்டாய்’ என்கிறது, “அடிதொழுது எழு” என்னச் செய்த அவ்வளவை அன்றோ. மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் இப்படிச் சொல்லுகையாலே, தம்மைத் தாழ்த்திக் கூறல் ஞானகார்யம்; “ஈஸ்வரரோகம் - நான் பெரியவன்” என்றிருக்கை அஜ்ஞான கார்யம் என்பது பெறப்படும்.

    தெருள்கொள் நான்மறை வல்லவர் - சிறந்த ஞானத்தையுடையராய்க் கொண்டு, நாலு வகைப்பட்ட வேதங்களையும் தாங்கள் நினைத்தபடி நிர்வஹிக்க வல்லவர்கள். என்றது, தெரியும்படி வேத தாத்பர்யம் கைவந்தவர்கள் என்றபடி. பலர் - ஒருவர் இருவர் அன்றிக்கே ஸ்ரீ வைகுண்டம் போலே திரள் திரளாயிருக்கை. வாழ் - வேதப்பொருளாய் விளங்குமவனைக் கண்டு அநுபவிக்கிறவர்கள். 3புண்ணிய தீர்த்தங்களிலே வசிக்கிற பிராணிகளுக்குப் பாவம் போகிறது இல்லை அன்றோ, ஞானம் இல்லாமையாலே; அங்ஙன் அன்றிக்கே, ஞானமும் அதனோடு சேர்ந்த செயலும் உடையராயிருக்கை. சிரீவரமங்கல நகர்க்கு அருள்செய்து அங்கு இருந்தாய் - சிரீவரமங்கல நகரிலுள்ளார்

___________________________________________________

1. திருவாய்மொழி, 3, 7 : 5.

2. “அடிமை கொண்டாய்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘உண்டாக்கின அளவேயோ’ என்று தொடங்கி. ‘கார்முகில் என்றது,
  பலித்தபடி’ என்றது, மேகம் ஜீவனத்தைக் கொடுக்குமன்றோ என்பதனைத்
  தெரிவித்தபடி.

3. “தெருள்கொள் நான்மறை வல்லவர்” என்று ஞானத்தைச் சொல்லி,
  “வாழ்” என்று அநுபவத்தைச் சொல்லுவது என்? திவ்யதேச வாசம் தானே
   உஜ்ஜீவனத்திற்குக் காரணம் அன்றோ? என்ன, அதற்கு விடை
   அருளிச்செய்கிறார் ‘புண்ணிய தீர்த்தங்களிலே’ என்று தொடங்கி.

  “கங்காதி தீர்த்தேஷு வஸந்தி மத்ஸ்யா:
   தேவாலயே பக்ஷிஸங்கா; சநித்யம்
   பாவோஜ்ஜிதா: தே ந பலம் ல பந்தே
   தீர்த்தாநி புண்யாயதநா: ச முக்யா:”

 
என்பது, இங்கு நினைத்தல் தகும்.