|
எந
எந்தாய் - எந்தையே!
பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி. நீர் சொல்லுகிறவை
எல்லாம் செய்தமை உண்டு ஆனாலும், அவர்கள் எனக்குப் பவ்யர் அலரோ? என்ன, ஆயின், 1அதுவும்
பாராதே அன்றோ நீ பூமியைக் காப்பாற்றியது என்கிறார் மேல்:
நிலம் கீண்ட அம்மானே-2அது
கிடக்கிடு வேணுமாகில், அதற்கு ஒன்று சொல்லுகிறாய்; பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை
இருந்தது நீ செய்வதற்கு? 3‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி
யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? இங்கு ஒருதலையே அன்றோ
உள்ளது. அம்மானே - ‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ.
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா - 4அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி
தெளிந்திருக்குமவர்கள். அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு
இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று, ‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள்.
ஆனால், இவற்றைச் செய்வது என்?
___________________________________________________
1. அதுவும் - பவ்யதையும்.
2. ‘அதுவும் பாராதே’ என்றதனை, வேறு வகையாக விவரிக்கிறார் ‘அது
கிடக்கிடு’ என்று தொடங்கி. அது கிடக்கிடு - அது நிற்க. தக்கோர்மை
-நன்மை.
3. “நிலம்” என்ற சொல்லைக்
கூறியதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘எடுக்க
வேணும்’ என்று தொடங்கி. ‘இங்கு ஒரு தலையேயன்றோ
உள்ளது’
என்றது, கிருஷ்ணனும் பாண்டவர்களுமான இரண்டு தலையிலும் சிநேகம்
உண்டு அங்கு; இங்கு,
அசேதனமான பூமிக்குப் பவ்யதை இல்லாமையாலே,
வராக நாயனாருடைய சிநேகமே உள்ளது என்றபடி.
4. “தேறு ஞானத்தர்”
என்பதனை, “வேத வேள்வி அறா” என்பதற்கு
அடையாக்கி அருளிச்செய்கிறார். ‘அநுஷ்டானத்தையும்’
என்று தொடங்கி.
வேள்வி - பஞ்ச மஹா யஜ்ஞங்கள். ஞானத்திற்குத் தேற்றமாவது, வேத
வேள்விகளில் உபாயத்வபுத்தி கலவாதிருத்தல். விகல்பிக்கலாம்படி -
சமமாக விகல்பிக்கலாம்படி.
என்றது, விலக்கிய ஒழுக்கங்களில் உபாயபுத்தி
செய்யாததைப் போன்று, விதித்த வேதத்திலும்
வேள்வியிலும் உபாயபுத்தி
பண்ணாதவர்கள் என்றபடி. அநநுஷ்டானம்-விலக்கிய ஒழுக்கங்கள்.
நாலாம்பத்.
காண்க.
|