பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
302

என

என்னில், 1சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான். அன்றியும், விலக்கிய ஒழுக்கங்கள் இராசத தாமத குணங்களை வளர்ப்பிக்குமாறு போலே, விதித்த ஒழுக்கங்களும் சத்துவ குணத்தை வளர்ப்பிக்கக்கூடியனவாய் இருப்பனவே அன்றோ. அன்றியும், 2சேதனன் ஆகையாலே ஒருதொழிலைச் செய்தன்றி நில்லானே. 3“சத்துவ குணத்தினின்றும் ஞானம் உண்டாகின்றது” என்கிறபடியே, ஞானத்துக்கும் காரணமாக இருக்குமே அன்றோ, ஆகையாலே, அநுஷ்டிக்கத் தக்கனவாகக் கடவனவேயாம். சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-4இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி. உன்னை-வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை. 5எங்கு எய்தக் கூவுவன் - நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது, இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும் என்றபடி.

(4)

_____________________________________________________

1. வேத வேள்வி அறாமல் செய்துகொண்டு போவதற்குக்குரிய காரணத்தை
  மூன்று வகையாக அருளிச்செய்கிறார் ‘சர்வேச்வரனுடைய’ என்று
  தொடங்கி. இம்மூன்றுள், ஈச்வரனுடைய ஆணையைச் செய்தவனாகிறான்
  என்றது ஒன்றும் பிரதாநமாய், மற்றைய இரண்டும் ஞானயோக நிஷ்டனுக்குச்
  சொன்னவையாகையாலே, அவ்விரண்டனையும் திருஷ்டாந்தமாக் கோடல்
  தகும்.

2. காரியங்களைச் செய்வதற்குரிய உறுப்புக்களையுடையவனாகையாலே
  யாதாயினும் ஒருதொழிலைச் செய்தன்றி நில்லானே என்றபடி.

3. கூறிய மூன்று காரணங்களுள் இரண்டாவது காரணத்தால் பயன் யாது?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சத்துவ குணத்தினின்றும்’
  என்று தொடங்கி.

  “ஸத்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோபஏவச
   ப்ரமாத மோஹௌ தமஸோ பவத: அஜ்ஞாநமேவச”

  என்பது, ஸ்ரீ கீதை, 14 : 17.

4. “ஏறி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவனும்’ என்று தொடங்கி.
  “வீற்றிருந்தாய்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவர்கள் நடுவே’
   என்று தொடங்கி.

5. “எங்கு எய்தக் கூவுவன்” என்பதற்கு, உன்னைக் கிட்டுவதற்கு என்ன
   சாதனத்தைச் செய்யப்புகுகிறேன் என்பது பொருள். கூவுதல்-சாதன
   அநுஷ்டானத்தாலே அழைத்தல்.