பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
305

1இன

    1இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ, ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச்செய்கிறார் மேல்: எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே - 2அடியர் அல்லாதார்பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப்புக்கதோ இப்போது. எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று - எவ்வகைப்பட்ட பகைவர்கள் கூட்டங்களினுள்ளே புக்கு. தெவ்வர் - பகைவர். தெவ்வம்-பகைவர் கூட்டம். 3“தெவ்வர் அஞ்சு” என்னக்கடவதன்றோ. கைதவங்கள் செய்யும்-வஞ்சகங்களைச் செய்கின்ற. என்றது, புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக சிரத்தையைப் போக்கினமையைத் தெரிவித்தபடி. கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே - வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மாளப் பண்ணினபடி.

___________________________________________________

1. மேலிற்பதத்திற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘இனி, பிரபலனாய்’
  என்று தொடங்கி. ‘இனி’ என்றது, உபாயத்தைச் செய்வதற்குத்
  தகுதியில்லையாயின பின்பு என்றபடி. ‘அதனைத் தள்ளி’ என்றது, ‘சாதன
  அநுஷ்டானம் பண்ண முடியாதவன் இழந்தே போமித்தனை’ என்கிற
  சோகத்தைத் தள்ளி என்றபடி. ஆக, சித்தோ பாயனான சர்வேச்வரனுடைய
  சக்தியைச் சொல்லி, இப்படிச் சக்திமானான நீயே உபாயமான பின்பு இழக்க
  வேண்டுவது இல்லை என்கைக்காக, சாதன அநுஷ்டானம் பண்ண
  மாட்டேன் என்றதன்பின், அசுரர்களின் கூட்டத்தை வஞ்சித்த வகையை
  அருளிச்செய்கிறார் என்றபடி.

2. அவதாரிகையிலே விரோதியை அழிப்பதற்கு உறுப்பாக அருளிச்செய்து,
  இங்கே, அவர்களை வஞ்சித்தாற்போலே என்னையும் வஞ்சித்தாய் என்று
  வெறுப்பாக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அடியரல்லாதார்’
  என்று தொடங்கி. என்றது, அவர்களுக்கு வைதிகச் சிரத்தையைக்
  குலைத்தாற்போலே, சித்தசாதநன நிஷ்டனான என்னுடைய
  அத்யவஸாயத்தையும் குலைக்கலாமோ இப்போது என்றபடி.

3. தெவ்வர் - பகைவர் என்பதற்கு மேற்கோள். ‘தெவ்வர் அஞ்சு’ என்பது.
  இது, பெருமாள் திருமொழி, 10:3.