பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
306

என

என்றது, 1தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி, ஒருவன் அம்புக்கு இலக்காம்படி செய்து வைத்தமையைத் தெரிவித்தபடி. அம்மானே-சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச்செய்தது 2அடியார்களுக்காக அன்றோ? 3ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது. “ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” என்றாரே அன்றோ இவர். அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று, சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

    செய்த வேள்வியர் - சித்தோபாய நிஷ்டர்கள். 4“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடி

____________________________________________________

1. திரிபுரங்களை அழித்தது சிவன் அலனோ? இவன் பிணமாக்கினபடி
  எப்படி? என்ன, ‘தன்னுடைய’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். ஒருவன்-சிவபெருமான்.

  “செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
   கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
   
தொல்புகழ் தந்தாரும் தாம்”

  என்பது, பரிபாடல்,

2. ‘அடியார்களுக்காக அன்றோ’ என்றதற்குக் கருத்து, அம்மானாய் வைத்தும்,
   ஆஸ்ரித பக்ஷபாதத்தாலே அவர்களை அழித்த நீ, அடியனான
   என்னையும் அழிக்கலாமோ? என்பது.

3. உம்மை நாம் அழித்தேமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘ஒரு தெய்வம்’ என்று தொடங்கி. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றவிடத்தில்,
  ‘உன்னைத் தவிர’ என்பது எஞ்சி நின்றது. சர்வேச்வரனைத் தவிர, வேறு
  தெய்வம் இல்லை என்று இருப்பவர் இவர் என்பதற்கு மேற்கொள்
  காட்டுகிறார் ‘ஒரு மா தெய்வம்’ என்று தொடங்கி. இது, திருவாசிரியம், 7.

4. “செய்த வேள்வியர்” என்றால், சித்தோபாய நிஷ்டரைச் சொல்லுமோ?
   என்ன, அர்த்த ஒளசித்தியத்தாலே சொல்லும் என்று அதற்குப் பிரமாணம்
   காட்டுகிறார் ‘அரசனே’ என்று தொடங்கி.

  “ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா:
   ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
   விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
   தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”

  என்பது, பாரதம்.