|
வ
வி-கு :-
ஏனம் - பன்றி, தேன - தேனையுடைய, அ: ஆறாம் வேற்றுமையுருபு. மாம்பொழில் - மாமரச்
சோலை. உறை - வசிக்கின்ற.
ஈடு :- ஆறாம்
பாட்டு 1மேற்பாசுரத்தில் அவாய் நிலையாற்போந்த கைங்கரியத்தை விரும்புகிறார்
இப்பாசுரத்தில்.
ஏனமாய் நிலம்
கீண்ட - ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது. காத்தல்
ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி. ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-பிரளயம்
கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய், சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-பிரளயத்தாற்கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது
தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி. என் அப்பனே கண்ணா - 2என்னைக் காப்பாற்றுவதற்கு
ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ? என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
3கண்ணன் கோள் இழை வான்முகமே அன்றோ இவர்க்கு இரக்ஷகம். என்றும் என்னை ஆளுடை
வான நாயகனே - 4தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்ட
____________________________________________________
1. “அடியேன் தொழ வந்தருளே”
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. “என்னப்பனே கண்ணா”
என்பதற்கு, வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில்
வைத்து, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘என்னை’ என்று
தொடங்கி. முகம் - வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம்
- வராகமும்,
அலங்காரமும்.
3. வேறு ஒரு முகம்கொள்ளாமல்
ஸ்வாபாவிகமான கிருஷ்ணனுடைய முகமே
போருமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “கண்ணன்”
என்று
தொடங்கி. இது, திருவாய்மொழி, 7. 7 : 8.
4. “வானநாயகனாய் வைத்து
என்னையாளுடைய” என்று பிரித்துக் கூட்டிக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘தனக்குத் தகுதியான’ என்று
தொடங்கி.
இடையாட்டம் - காரியம். “என்றும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘இவர் சத்தையே’ என்று தொடங்கி.
|