பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
309

ம

மாயிற்று ஆராய்ந்துபோருவது. இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது. மணி மாணிக்கச் சுடரே - 1உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து, இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்தியசூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான். மணி மாணிக்கச் சுடர் - 2இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் என்னுதல். மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் ஒளியையுடைத்தாயிருப்பவன் என்னுதல்.

    தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை - தேனையுடைத்தான மாம்பொழிலையுடைத்தாகையாலே சிரமஹரமான சிரீவரமங்கல நகரத்திலுள்ளார், ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யும்படி இருக்கிற. வானமாமலையே-3நித்தியசூரிகளை அடிமை கொண்டிருக்கும் வேண்டற்பாடு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும். அடியேன் தொழ வந்தருளே - நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்றவேண்டும். நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும் என்பார் ‘வந்தருளே’ என்கிறார். என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும் என்றபடி. 4அடிமை

____________________________________________________

1. “என்றும் என்னை யாளுடைய” என்றதற்கு, அருளிச்செய்த பொருளையும்
   அநுவதித்துக்கொண்டு, “மணி மாணிக்கச் சுடரே” என்றதற்கு, பாவம்
   அருளிச்செய்கிறார் ‘உளரான பின்பு’ என்று தொடங்கி.

2. இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் - இந்திர நீலமணி.
  ‘மணியினுடையவும், மாணிக்கத்தினுடையவும்’ என்ற இடத்தில், மணி -
  நீலமணி. மாணிக்கம் - பத்மராகம். இருவகைப் பொருளிலும் சுடர்
  என்பதற்கு, விக்கிரஹம் என்பதுவே பொருள்.

3. வானத்திலே - பரமபதத்திலே, பெரிய மலை போலே, அளவிடற்கு
  அரியனாய்க்கொண்டு வீற்றிருந்தாற்போலே, இங்கும் எழுந்தருளியிருக்கிறான்
  என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகளை’
  என்று தொடங்கி. வேண்டற்பாடு - பெருமை.

4. நடக்கிறபோது செய்கின்ற அடிமை யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அடிமை செய்கையாவது’ என்று தொடங்கி.
  ‘அன்றிவ்வுலகம்’ என்பது, திருப்பாவை, 24-ஆம் பாசுரம்.