|
ற
றின் தன்மையை அறிந்திருக்கிற
என்னையும் நீக்கி, கரை ஏற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்;
மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய
தேசத்தில் நித்திய வாசம் செய்கின்றவனே! என்றும் பேசுதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய
வாயினைப் பிளந்தவனே!
வி-கு :-
வாணனே! எந்தாய்! பிளந்தானே! என்னையும் அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் என்க. வாழ்நன்
என்பது, வாணன் என மரீஇயது. கண்டாய்: முன்னிலை அசைச்சொல். பகர் - சொல்லப்படுகின்ற
எனலுமாம். ‘பகற்கதிர்’ என்ற பாடம் சிறக்கும். புகற்கு அரிய - அன்பில்லாதார்
அடைவதற்கு அரிய என்னலுமாம்.
ஈடு :- எட்டாம்
பாட்டு. 1உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது
உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே
வைத்த போதே என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார்.
அகற்ற நீ வைத்த
- 2சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக, “என்னுடைய
மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த. மாயம் வல் ஐம்புலன்களாம் அவை - ஆச்சரியமான செயல்களைச்
செய்யக்கூடியனவாய்த் தப்ப ஒண்ணாதபடியாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களாகிறவை, 3உன்னை
விரும்பாதார் அகன்று போம்படிக்குத்
____________________________________________________
1. “அகற்றி என்னையும் நீ”
என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “நீ அகற்ற வைத்த மாய
வல் ஐம்புலன்களாமவை” என்று கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘சர்வ சக்தியான நீ’ என்று தொடங்கி.
‘இந்திரியங்களுக்குத் தப்ப முடியாது’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய மாயை’ என்று
தொடங்கி.
“தைவீஹி ஏஷா குணமயீ மம
மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே”
என்பது, ஸ்ரீகீதை, 7:14. இதனைப்
பிரமாணமாக எடுத்தது, இந்திரியங்களும்
பிரகிருதியின் காரியமாய் அதற்குள்ளே அந்தர்ப்பூதமாகையாலே
என்க.
3. “மாய வல் ஐம்புலன்களாமவை
அகற்ற நீ வைத்த” என்று மாற்றிக்கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘உன்னை விரும்பாதார்’
என்று தொடங்கி.
|