|
த
தகுதியாகச் சர்வேச்வரனான
நீ வைத்தவை. நீர் எங்ஙனே இது அறிந்தபடி? என்ன, நன்கு அறிந்தனன் - மயர் வற மதி நலம் பெறுகையாலே
நான் அழகிதாக அறிந்தனன். 1உகவாதார் அகன்று போகைக்கு வைத்தோமாகில், அதனால்
உமக்கு என்? என்ன, அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் - உன்னால் அல்லது
செல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன்பக்கல் நின்றும் நீ பிரித்து, கால்வாங்க ஒண்ணாதபடியான
ஐம்புல இன்பங்களிலே தள்ளப் புகாநின்றாய். 2இந்த உடம்போடு எனக்கு ஒரு சம்பந்தம்
அற்றிருக்க, நீ பொதுவான இதிலே வைக்கிறது கைவிடப் பார்த்தன்றோ? நன்று; அவன்பக்கல் காரியம்
கொள்ள நினைக்கிறவர், அருளில்லாதவர்களைச் சொல்லுமாறு போன்று கொடிதாகச் சொல்லுவான் என்?
என்ன, ‘நமக்கே பழியாய் வந்து விளையப் புகாநின்றது’ என்று நீர்மையுடையார் காரியம்
செய்து தலைக்கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.
பகர்க் கதிர் மணி
மாடம் நீடு சிரீவரமங்கை வாணனே - மிக்க ஒளியையுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தையுடைத்தான
சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே! பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்;
மிக்க ஒளி என்பது பொருளாம். ‘பகற்கதிர்’ என்று பாடமான போது, சூரியலோகம் வரையிலும் செல்ல
உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் - சூரியன். என்றும் புகற்கு அரிய
எந்தாய் - நீ, கிட்டாமல் செய்யுமதுவும் அழியச்செய்வதும் உகவாதாரை அன்றோ. உனக்கே உரியனான
என் விஷயத்திலும் அதனைச் செய்யவோ என்பார் ‘எந்தாய்’ என்கிறார். புள்ளின் வாய்
பிளந்தானே - உமக்குக் கிட்டுதற்குத் தட்டு என்? என்ன, பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர
சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.
(8)
_____________________________________________________
1. “என்னையும்” என்ற உம்மைக்குப்
பொருள் அருளிச்செய்கிறார்
‘உகவாதார்’ என்று தொடங்கி.
2. நாம்
உம்மை விஷயங்களிலே தள்ளினேமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இந்த உடம்போடு’
என்று தொடங்கி.
|