பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
326

ஆய

ஆயிரம் - 1அர்த்தம் வேதார்த்தமேயாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது. 2பரத்துவம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாச புராணங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. 3செய்த ஆயிரம் அன்றோ. அன்றிக்கே, 4தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல். உடன்பாட வல்லார் - அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாயசூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி. வைகலும் வானோர்க்கு ஆராவமுதே - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர். 5தேவசாதிகள் அமுதம்பெற்றுக் கிருதார்த்

____________________________________________________

1. திருவாய்மொழி வேதமாயிருக்க, “செய்த ஆயிரம்” என்னலாமோ? என்ன,
  ‘அர்த்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது,
  ஆப்ததரமான ஆழ்வார் பக்கலிலே பிறந்தது ஆகையாலே
  செய்யாமொழியாகிய வேதத்தைக்காட்டிலும் இது உயர்வுக்குக்
  காரணமாயிருக்கும் என்றபடி.

2. வேதத்தைக்காட்டிலும் இதற்கு உயர்வு யாது? என்ன, ‘பரத்துவம் போலே’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

  செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
  பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே - செய்யா
  வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை
  இதற்குரியர் அல்லாதார் இல்.

  என்பது, இங்கு ஒப்பு நோக்குதல் தகும். திருவள்ளுவமாலை, 23.

      ‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, சர்வாதிகாரம் என்பது கருத்து.
  ஆசாரியஹ்ருதயம் முதல் பிரகரணத்தின் பொருளை இங்கு நோக்கல் தகும்.

3. ‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, எப்படி? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘செய்த ஆயிரம் அன்றோ’ என்று.

4. மேலே வேதார்த்தத்தைச் செய்த ஆயிரம் என்று அருளிச்செய்து, வேத
  அவதாரம் என்றும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘தமப்பன் இல்லாத’
  என்று தொடங்கி. என்றது, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்து நிறம்பெற
  வேண்டும் என்றபடி.

5. “அமுது” என்றதிலே நோக்காக, மேல்வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
  ‘தேவசாதிகள்’ என்று தொடங்கி.