|
தர
தராமாறுபோலே, நித்தியசூரிகள்
‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
1வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய அவர்கள், வேறு உபாயங்களில்
விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே, வேறு உபாயங்களில் விருப்பம்
இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்தியசூரிகளுக்கு அமுதாவர்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
நோற்றநோன் பாதியிலேன்
நுன்தனைவிட்டாற்றகிலேன்
பேற்றுக் குபாய முன்தன்
பேரருளே - சாற்றுகின்றேன்
இங்கெனிலை என்னும்
எழில்மாறன் சொல்வல்லார்
அங்கமரர்க்கு ஆரா
வமுது.
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்
____________________________________________________
1.
வானோர்க்கு ஆராவமுது ஆகைக்குக் காரணம் என்? என்ன, ‘வேறு
உபாயங்களில்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
|