பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
328

எட

எட்டாம் திருவாய்மொழி - “ஆராவமுதே”

முன்னுரை

    ஈடு :- 1சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்; இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க; 2கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்; தரித்த இதுதான் திருக்குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று. 3என்தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டாதொழியவும்

____________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார் ‘சிரீவரமங்கல நகரிலே’ என்று தொடங்கி.
  மேல்திருவாய்மொழிலேயுள்ள “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்”
  என்றதனைக் கடாக்ஷித்து, ‘வேறு கதியில்லாதவராய்க்கொண்டு’ என்கிறார்.
  ஆர்த்தி - துன்பம்.

2. ‘முகங்காட்டாதிருக்க’ திருக்குடந்தைக்குச் செல்லுவதற்குத் தரிப்பு
  உண்டானவாறு எங்ஙனே? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘கடலில் அமிழ்ந்துவார்’ என்று தொடங்கி. மிதப்பு - தெப்பம். “ஆறு
  எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
  ‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கே, ‘வேறு
  ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல்
  செய்தல்’ என்றிருக்கையாலே, “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத்
  தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று
  யோசனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று
  தோற்றுகிறது. அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும்
  தந்தாய் என்பது. “நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை
  நீக்குகிறது; “நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை
  நீக்குகிறது; ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்”
  என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும். இத்தால், இந்த நிலையிலும்,
  ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான்
  என்றபடி. ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது,
  வேறு இரக்ஷகரில்லாமை.

3. ‘என்தான்?’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து, வஸ்து
  ஐக்யத்தாலே அங்கிருக்கிறவனும் இவனேயாயிருக்க, இங்கே