|
அங
அங்கு ஏறப்போகவேண்டுவான் என்? என்னில், 1‘ஒரு
கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா, நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து
ருசியும் நெகிழுமவரன்றே; “அடியார்களுக்காக எழுந்தருளியிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக்கட்டாமை
இல்லை, ‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதியிடப்பட்டதாயிருக்குமே அன்றோ, ஆன
பின்பு, இங்குச்செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்; 2இனித்தான்,
ஸ்ரீபரதாழ்வான் ‘பெருமாளை மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு
செல்ல. ‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ; ஆகையாலே,
நமக்கு நான்கு நாள் தாழ்த்ததேயாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து,
‘திருக்குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும், நமக்கு ஒரு குறையும் இல்லை’
என்று திருக்குடந்தையை அடைந்தார்.
அவ்வாறு அடைய, 3ஸ்ரீபரதாழ்வான்
‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒரு
____________________________________________________
பலியாவிட்டால் அங்கே பலிக்கக்கூடுமோ? அதற்குமேல், ‘ஒரே
முறை
செய்யக்கூடியதாய் அமோகமான பிரபத்தியும் பயன் அற்றதாய்விட்டது’
என்று விசுவாசம் குறைந்து
ருசியும் நெகிழாதோ என்னில்? என்பது.
1. மேலே கூறிய இரண்டு சங்கைகளையும் முறையே பரிஹரிக்கிறார்
‘ஒருகால்’ என்று தொடங்கி. என்றது, அரசர்கள் ஆசன பேதத்தாலே
காரியம் செய்யுமாறு போலேயும்,
நம்பெருமாள், திருமங்கையாழ்வாருடைய
அபேக்ஷிதத்தைக் கோயிலிலே செய்யாமல் திருக்குறுங்குடியிலே
செய்தது
போலேயும் தேசம் அறுதியிடப்பட்டதாயிருக்கும் என்றபடி.
2. காலவேற்றுமையாலும் காரியம் செய்வான் என்பதற்கு,
வேறு ஒரு காரணம்
காட்டுகிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி. ஆக, இதனால், ‘இன்னானை
இன்ன தேசத்திலே
அங்கீகரிக்கக் கடவோம்’ என்றும், இன்ன காலத்திலே
அங்கீகரிக்கக்கடவோம்’ என்றும் அவனுக்கு
இரண்டு நிலைகள் உண்டு;
ஆகையாலே அந்த இரண்டு நிலைகளையும் அறிந்திருக்கிற இவர், இங்குச்
செய்திலனாகில்
இன்னம் ஒரு தேசத்திலே செய்கிறான், இப்போது
செய்திலனாகில் வேறு ஒரு காலத்திலே செய்கிறான்
என்று
திருக்குடந்தையிலே புக்கார் என்றபடி.
3.
‘திருக்குடந்தையிலே போனால் நம் அபேக்ஷிதங்கள் எல்லாம் கிட்டும்’
என்று இவர் பாரித்ததற்கும்,
இதற்கு அதன் காரியம் செய்யா
|