பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
334

    அடியேன் - மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர், இனிமைக்குத் தோற்றுப் 1புற்கவ்விச் சொல்லுகிறார். 2“பரவாநஸ்மி - அடியவன் ஆகிறேன்” என்றவர் 3“அவர் குணங்களால் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறேன்” என்றாற்போலே. உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைய உருக்குகின்ற நெடுமாலே - சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் சரீரம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்தது. 4‘நான்’ என்று இருக்கக்கூடிய இவர்தாம்

____________________________________________________

1. புற்கவ்வுதல் - போரிலே தோற்றவன் ஆயுதத்தைப் போட்டுக் கீழே
  விழுதல்.

  வில்லெ டுக்கவுரி யார்கள் ஐயசில வீர ரிங்குமுளர் மெல்லியோய்!
  கல்லெ டுக்கவுரி யானு நின்றனன் அதுஇன்று நாளையிடை காணலாம்
  எல்லெ டுத்தபடை இந்தி ராதியர் உனக்கிடைந் துயிர்கொ டேகுவார்
  புல்லெ டுத்தவர்க ளல்லம் வேறுசில போரெடுத் தெதிர் புகுந்துளேம்.

  என்பது, கம்பராமாயணம்.

  விறகவ்வு வாளி யடலைவர் மீது விடவஞ்சி வீரர் எதிரே
  புறகவ்வு மாகில் விரைவோடு கங்குல் புலராமுன் வந்து பொருவேன்
  சொற்கவ்வை யாக நினையற்க கொன்று சுரர்நா டாளிப்ப னினியுன்
  சிற்கவ்வை தீர வவருக்கும் நின்ற திருமாலினுக்கு மெனவே.

  என்பது, வில்லிபாரதம்.

2. ‘ஸ்வரூபத்தோடு கூடியதான தாஸ்யமே உத்தேசியம்’ என்றிருக்கிறவருக்கு,
  இனிமைக்குத் தோற்று “அடியேன்” என்கிற இது, பொருந்துவதாமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரவாநஸ்மி’ என்று தொடங்கி.

  “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
   ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”

  என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

3. “அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
   கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”

  என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.

4. விரோதியாய் நிற்கும் நிலை குலைகைக்குக் காரணம் யாது? என்ன,
  திருஷ்டாந்த மூலமாக அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நான் என்று’
  என்று தொடங்கி.