|
New Page 1
‘அடியேன்’
என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ;
அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி. 1சேஷத்வமே உருவமான
ஆத்மாவைத் தன்வழியே இழுக்கை தவிர்ந்து, அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய
இனிமை. அன்றிக்கே, 2ஞான ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாதல், அதற்குத் தோள் தீண்டியான
ஞானம் செல்லுதற்கு வழியான மனமாதல் அன்றிக்கே, இவற்றுக்கு அவ்வருகான தோல் சதை நிணம்
எலும்பு வடிவமான சரீரமும் அழியும்படியாயிற்று என்னுதல். 3சேதனம் என்றும் அசேதனம்
என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து
அன்புதான் ஒரு வடிவு கொண்டாற்போலே இராநின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.
4உடலம்
அன்பாய், அன்புதான் நீராய்க் கொண்டு அலையாநின்றது என்பார் ‘உடலம் அன்பாய் நீராய்
அலைந்து’ என்கிறார். 5முதல் முன்னம் கேள்வியாய், அதன் பின் மனனமாய்,
பின்னை பாவனையாய், அது பிரத்யக்ஷ ஸமாநாகாரமாய்க் கொண்டு அவ்வடைவிலே வருகிறதன்றே, விஷயம்
அழிக்க அழிகிறதித்தனை அன்றோ.
___________________________________________________
1. ‘சேஷத்வம் ஆத்மாவுக்கு’
என்று தொடங்கிய மேல் வாக்கியத்தின்
விவரணம், ‘சேஷத்வமே உருவமான’ என்று தொடங்கும்
வாக்கியம்.
‘தான்’ என்றது, சரீரத்தை.
2. விரோதியான சரீரமும்
அழியும்படியாயிற்று என்று ஒரு பாவம்
அருளிச்செய்து, அசேதனமான சரீரமும் அழியும்படியாயிற்று என்று
வேறும் ஒரு பாவம் அருளிச்செய்கிறார். ‘ஞான ஆனந்த ஸ்வரூபனான’
என்று தொடங்கி.
3. ‘அன்பையுடைத்து’ என்னாது,
“அன்பாயே” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘சேதனம் என்றும்’ என்று தொடங்கி.
4. வடிவு இல்லாத அன்பு நீராகக்
கூடுமோ? என்ன, அசேதனமான சரீரம்
விஷயவைலக்ஷண்யத்தாலே அன்பானாற்போலே, வடிவில்லாத அன்பும்
நீராயிற்று என்கிறார் ‘உடலம் அன்பாய்’ என்று தொடங்கி.
5. சாஸ்திரம்
சொல்லுகிறபடி அன்றிக்கே, உடலம் அன்பாய், அன்பு நீராய்,
இப்படி முறை கேடாகக் கூடுதல் ஆமோ?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘முதன் முன்னம்’ என்று தொடங்கி.
|