|
ஈ
ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1இப்படிக் கூப்பிடச் செய்தேயும் மறுமாற்றம் தாராமையாலே,
‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனை அன்றோ’ என்று இருந்தானாகக் கொண்டு முன்பு செய்த
உபகாரங்களைக் கூப்பிடுகிறார்.
எம்மானே! என் நான்
செய்கேன் - 2உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார். ‘நீயே உன் காரியத்தைச்
செய்து தலைக்கட்டிக்கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ. என் நாதனே! எம்மானே என்
வெள்ளைமூர்த்தி - 3“உலகத்திற்கெல்லாம் தலைவன்”, “அந்தச் சர்வேச்வரனுக்கு
அடியவனாய் இருக்கிறேன்” என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ. பின்னர் எங்ஙனே செய்தபடி?
என்னில், 4சுத்த ஸ்வரூபனாகையாலே தன்படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத்
_____________________________________________________
1. திருப்பாசுர முழுதினையும்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனையன்றோ’ என்றது
பலம்
உம்மதான பின்பு அதற்குத் தக்க சாதனாநுஷ்டானமும் நீரே
செய்யுமித்தனையன்றோ என்றபடி.
2. சாதநாநுஷ்டானம் செய்யப்
போகாது என்கிறவிடத்தில் “எம்மானே”
என்று ஸ்வாமித்வத்தைச் சொல்லுகிறதற்குப் பிரயோஜனம்
யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘உடைமையோ’ என்று தொடங்கி.
இவ்வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘நீயே உன் காரியத்தை’ என்று
தொடங்கி. என்றது, ஸ்வம்மான (சொத்தான) என்னைப் பெறுகைக்கு
ஸ்வாமியான நீயே சாதநாநுஷ்டானம் பண்ண வேண்டுமித்தனையன்றோ
என்றபடி.
‘வெறும் நானேயாயிருந்தேனோ’ என்றது, கேவலம்
ஸ்வதந்திரனாயிருந்தேனோ, உமக்கு ஸ்வம்மன்றோ
என்றபடி.
3. “எம்மான்” என்பதனை
அறிந்திருந்தும், உபாசகர் தங்கள் முயற்சியாலே
தங்கள் காரியம் செய்துகொள்ள இல்லையோ? என்ன,
“எம்மானே” என்கிற
இது, சாதநாநுஷ்டானம் பண்ணப் பிராப்தி இல்லாமையைச் சொல்லுகிறது
என்னுமிடம்
தோன்ற அருளிச்செய்கிறார் “உலகத்திற்கெல்லாம்” என்று
தொடங்கி.
“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்
ஸாஸ்வதம்
ஸிவம் அச்யுதம்.”
“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.”
4.
“வெள்ளை” என்று வெளுப்பாய், சுத்தியைச் சொல்லுகிறது. “மூர்த்தி”
என்பது ஸ்வரூபம். ஆக, சுத்த
ஸ்வரூபனாகையாலே எனக்குத் தன்
பேறாக மயர்வற மதிநலம் அருளினான் என்கிறார் ‘சுத்த
ஸ்வரூபனாகையாலே’
என்று தொடங்கி. ‘ஒன்றும் குறையாதபடி’
என்றதனை விவரிக்கிறார் ‘சிறிதுமயர்வு’ என்று தொடங்கி.
|