|
தன
தன்பேறாகத் தானே காட்டக்
கண்டேன். சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்னை
ஆள்வானே - காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என்வழியேயாக்கி என்னைக் கைவிட்டாயோ.
என்றது, “அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும்
போக்கி, குணஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி. எம்
மா உருவும் ஆவாய் - 1எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே. அன்றிக்கே,
‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு, 2எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே!
என்னுதல். என்றது, 3“என்னுடையதான ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு” என்கிறபடியே, பிரகிருதி
சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய திருமேனியாக இருக்கை. 4வேண்டுமாற்றால்
- “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல். அடியார்கள் வேண்டுமாற்றால்
என்னுதல்; “தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்னக்கடவதன்றோ.
___________________________________________________
1. “எம்மாவுருவும்” என்பதற்கு,
மூன்று வகையாகப்பொருள்
அருளிச்செய்கிறார் ‘எனக்காகவும்’ என்று தொடங்கி. முதற்பொருளில்
‘எம்” என்பது, உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.
2. இரண்டாவது பொருளை
அருளிச்செய்கிறார் ‘எவ்வகையாலும்’ என்று
தொடங்கி. ‘எவ்வகையாலும்’ என்றது, அப்ராக்ருதமாகையாலும்,
இச்சையே
காரணமாகையாலும், பரார்த்தமாகையாலும் என்றபடி.
3. அவதார விக்ரஹங்களுக்கு
வைலக்ஷண்யம் உண்டோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடையதான’ என்று தொடங்கி.
“அஜோபிஸந் அவ்யயாத்மா
பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாமி ஆத்ம மாயயா”
என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
4. வேண்டுமாற்றால்
- இச்சித்த வகையாலே. தான் இச்சித்தபடியே என்னுதல்;
அடியார்கள் இச்சித்தபடியே என்னுதல்.
“தனக்கு வேண்டுருக் கொண்டு”
என்பது, தான் இச்சித்தபடியே வடிவைக் கொள்ளுவதற்கு மேற்கோள்.
இது,
திருவாய்மொழி. அடியார்கள் இச்சித்தபடியே வடிவைக் கொள்ளுவதற்கு
மேற்கோள், “தமருகந்த
தெவ்வுருவம்” என்பது. இது, முதல் திருவந். 44.
|