பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
346

அலன

அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.

    செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே - அவதாரகாலத்தில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாதபடி அன்றோ 1கோயில்களிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது. 2பரிமளம் முகத்தே வந்து அலை எறிய அதுதானே துடை குத்தக் கிடந்து உறங்குகிறபடி. அன்றிக்கே, 3சிவந்த பெரிய தாமரைகளானவை, காட்சிக்கு இனியதான நீரை அமுக்கி மேலே அலருகிறபோது, கடல்நிறமான வடிவையும் அங்குத்தை அவயவங்களையும் காட்டாநின்றன ஆதலின் ‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்’ என்கிறார் என்னுதல். அரைக்கணத்திலே செவ்வி மாறுகிற தாமரை அங்குத்தைக்கு ஒப்பாகாதே அன்றோ, வருந்திச் சொல்லும்போதும் இத்தனை ஏறிட்டுச் சொல்ல வேணுங்காணும் என்பார் ‘செம்மா கமலம்’ என்கிறார். 4அழகிய தாமரைப்பூப் போலே இருக்கிற திருக்கண்கள் அலரக் காண்கின்றிலேன் என்பார் ‘அம் மா மலர்க்கண் வளர்கின்றானே’ என்கிறார்.

_____________________________________________________

1. ‘கோயில்களிலே’ என்ற இவ்விடத்தில்
   நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
   நாகத் தணையரங்கம் பேரன்பில் - நாகத்
   தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்
   அணைப்பார் கருத்தனா வான்.

(நான்முகன் திருவந்.)

  என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.

2. “செம்மாகமலம்” என்றதற்கு, போக்யதைக்கு உறுப்பாக பாவம்
   அருளிச்செய்கிறார் ‘பரிமளம் முகத்தே’ என்று தொடங்கி.

3. அவன் திருமேனிக்கும் திவ்ய அவயவங்களுக்கும் போலியாயிருக்கும்
  என்று உபமான பரமாக வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘சிவந்த
  பெரிய’ என்று தொடங்கி.

4. “அம்மாமலர்” என்பதற்கு, இரண்டு வகையாகப் பொருள்
   அருளிச்செய்கிறார். முதற்பொருளில், “அம்” என்பது, சொல்.
   இச்சொல்லுக்குரிய பொருளையே ‘அழகிய தாமரை’ என்று தொடங்கி
   அருளிச்செய்கிறார். இரண்டாவது பொருளில், சுட்டுப் பெயராகக் கொண்டு
   பொருள் அருளிச்செய்கிறார் ‘அவற்றோடே’ என்று தொடங்கி.