பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
345

என

என்னும் மேனாணிப்பையுடையவனாயிருக்கும். “வானிளவரசு” என்கிறபடியே, அகம்படி வைத்த அரசாய் இருக்கும் அங்கு, அச்செறுப்புத் தீர, தான் விரும்பினபடி சஞ்சரிக்கப்போந்த இடமே அன்றோ இது. ஆகையாலே, அங்கு நின்றும் போந்து பிறந்த பின்பாயிற்று ‘எழில் ஏறு’ ஆயிற்று. 1அடி அறிவார், 2தேவரீர், பிராட்டியோடு கூடியவரும் சக்கரத்தைத் தரித்தவரும் எங்கும் நிறைந்திருப்பவருமான நாராயணன் என்னும் தெய்வம் ஆவீர்; தேவரீர் ஒற்றைக் கொம்புள்ள வராக அவதாரம் செய்தவர், சென்றவர்களும் வருகின்றவர்களுமான பகைவர்களை அழித்தவர்” என்றால், அது பொறாதவனாய் 3“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும், 4“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும்

_____________________________________________________

  செய்கிறார் ‘வானிளவரசு’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி,
  3. 6 : 3. “வானிளவரசு’ என்பதற்குப் பொருள், முதியோர்களான
  அமைச்சர்களின்கீழே இளவரசன் இருப்பது போன்று, நித்தியசூரிகள்
  தங்கியிருக்கின்ற பரமபதத்தில் இளவரசாக உள்ளவன் என்பதாம். அகம்படி
  - பழைய படியார். உள் என்றுமாம். செறுப்பு - சங்கோசம்.

1. இங்கு இருப்பதுவே இஷ்டமாய் மேனாணித்திருப்பான் என்பதற்கு,
  பகவானுடைய வார்த்தையையும் பிரமாணம் காட்டுகிறார் ‘அடியறிவார்’
  என்று தொடங்கி.

2. “பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு:
   ஏகஸ்ருங்கோ வராஹ: த்வம் பூதபவ்யஸபத்நஜித்”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன்
  துதித்தது.

3. ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்
  யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீது மே”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.

4. “நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ:
   அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”

 
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12. இது கோவர்த்தந கிரியை எடுத்துக்
  குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
  சூழ்த்துக் கொடுக்கும்படி - ஆணையிட்டுக் கொடுக்கும்படி.