பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
344

1இப


1
இப்படி இராத அன்று இவனுக்கு மார்விலே கையை வைத்து உறங்க ஒண்ணாதே.

   
எழில் ஏறே - இப்படி அடியார்கட்காகப் பிறவாநின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில், பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை. 2கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ. “அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியையுடையவனாகிறான்” என்பது சுருதி. 3எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும். தேசம் அறியப் புகர் உண்டாய் நெஞ்சு வெறுத்திருக்குமோ? என்னில், 4“பட்டி மேய்ந்தோர் காரேறு” என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’

___________________________________________________

1. ‘இப்படி இராத அன்று’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
  அவதாரங்கள் உண்மையல்லவானால், அவ்வவதாரங்களில் சொல்லப்பட்ட

  “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
   அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”

  (ஸ்ரீராமா. சுந். 18:33.) என்பது போன்ற சுலோகங்களும் உண்மையல்லவாம்
  ஆகையாலே, அவ்வார்த்தைகளை நம்பிப் பயம் அற்றவனாயிருக்கக்
  கூடாதே என்பதாம். அன்றிக்கே, இப்படி, அவன் அனுக்ரஹத்தாலே
  அவதாரங்களைச் செய்யாதபோது, இவனுக்கு ‘அவனே ரக்ஷகன்’ என்று
  நம்பிப் பயமற்றவனாயிருக்க விரகு இல்லையே என்னுதல்.

2. பண்டு இல்லாத எழில் உண்டாதற்குக் காரணம் என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘கர்மத்தால்’ என்று தொடங்கி. அதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார் ‘பல பிறப்பாய்’ என்று தொடங்கியும், ‘அவதரித்த
  பின்பு’ என்று தொடங்கியும்.

  “பல பிறப்பாய்” என்பது, திருவாய். 1. 3. 2.

  “யுவா ஸு வாஸா: பரிவீத ஆகாத் ஸஉஸ்ரேயாந்
   பவதி ஜாயமாந:”

  என்பது, யஜு ர் வேதம். 3. 6 : 1.

3. இந்தச் சுருதிக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘எல்லார்க்கும்’ என்று
  தொடங்கி.

4. “எழில் ஏறு” என்பதிலுள்ள “எழில்” என்ற சொல்லின் பொருளை
   அருளிச்செய்தார் மேல். “ஏறு” என்ற சொல்லின் பொருளை
   அருளிச்செய்கிறார் ‘பட்டி மேய்ந்தோர்’ என்று தொடங்கி. “பட்டி
   மேய்ந்து” என்பது, நாய்ச்சியார் திருமொழி. 14 : 1. மேனாணிப்பு - கர்வம்.
   எடுத்த பாசுரத்திற்குப் பொருள் அருளிச்