பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
348

அ

அடியேனுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.

    வி-கு :-
கண் - தொழில்; வேலைப்பாடு. முதனிலைத் தொழிற்பெயர். அரு - ஆத்மா. வாழ்நாள் என்பது, வாணாள் என மரீயது.

    ஈடு :-
மூன்றாம் பாட்டு. 1இப்படி நசை அற்றாற்போலே துடித்துக் கிடந்து கூப்பிட்ட இடத்திலும், குளிர நோக்குதல் வினவுதல் செய்யாமையாலே, பேறு தம்மதானால் பெறுவார்க்கும் சில செய்ய வேணும் என்று இருந்தானாகக் கொண்டு, நான் என் காரியம் செய்கை என்று ஒன்று உண்டோ, நீ செய்து தலைக்கட்டித் தரவேணும் என்கிறார்.

    என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் - 2என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ? ‘என் நான் செய்கேன்’ என்றதனால் 3‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர், நான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்ற

_____________________________________________________

1.  பாசுர முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘நசை
   அற்றாற்போலே’ என்றது, தம்முடைய பிராணனில் நசையற்றாற்போலே
   என்றபடி.

2. “என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே
   களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும், “என்னை என்
   செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும்
   இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்மேலே’
   என்று தொடங்கி. ‘என்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, ‘இவனே
   சாதநாநுஷ்டானம் பண்ணுகிறான், நாம் என்’ என்று என் மேலேயாக்கி
   முகங்காட்டாதிருக்கிறாயோ? அதற்கு நான் க்ஷமன் அல்லேன் என்கிறார்
   என்றபடி.

      ‘பிறர்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, பிறர் இவனை
   ரக்ஷிக்கின்றார்கள் என்று அவர்கள் மேலேயாக்கி
   முகங்காட்டாதிருக்கிறாயோ? அவர்கள் ரக்ஷிக்க மாட்டார்கள் என்றபடி.
   ‘நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ’ என்றது, இவர் நிலையும்
   பிறர் நிலையும் இப்படியான பின்பு நாமே யன்றோ உளோம் என்று நீயே
   ரக்ஷிக்கப் பார்க்கிறாயோ என்றபடி.

3. “என் நான் செய்கேன்” என்றது,  அநுவாதமன்று, வினாவுமன்று;
   க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன