பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
349

வற

வற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார். ‘யாரே களைகண்’ என்றதனால், 1அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ? 2ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள் என் காரியம் செய்யவோ? என்கிறார். 3நெறி காட்டி நீக்குதியோ, நின்பால் கரு மாமுறி மேனி காட்டுதியோ, நீ நினைத்திருக்கிறது என்? என்பார் ‘என்னை என் செய்கின்றாய்’ என்கிறார். என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என்செய்கின்றாய் - 4என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ 5என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது. யாரே களைகண்-

____________________________________________________

  சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி. இதனைக் காட்டுகிறார்
  ‘நான் செய்வது எது’ என்று தொடங்கி. இங்கே, “என் நான் செய்கேன்’
  என்றவிடத்தில் இம்மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீ சூக்தி
  அநுசந்தேயம்.

1. நீர் அசக்தரானால், சக்தரான வேறு தெய்வங்கள் ரக்ஷகர் ஆனாலோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அமிழ்ந்துகிறார்’ என்று
  தொடங்கி. என்றது, அவர்கள் சக்தியில்லாதவர்கள் என்றபடி.

2. எடுக்கமாட்டார்களேயானால், உசாத்துணையாயினும் ஆவர்களோ?
  என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒருவருக்கொருவர்’ என்று
  தொடங்கி. என்றது, அறிவின்மையாலும் என் காரியம் செய்யமாட்டார்கள்
  என்றபடி.

3. “என் செய்கின்றாய்” என்ற ஐயம், த்விநிஷ்டமாகையாலே,
   அருளிச்செய்கிறார் ‘நெறிகாட்டி’ என்று தொடங்கி.

  இது, பெரிய திருவந்தாதி, 6. “நெறி” என்பது வேறு உபாயங்களை.

4. ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என்
  செய்கின்றாய்” என்ற இம்மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய,
  முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத்
  திருவுள்ளம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார் ‘என்னை
  அறியாயோ’ என்று தொடங்கி.

5. ‘அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன சாதநாநுஷ்டானம் பண்ணுவேன்’
  என்னுமதனைக் குறிப்பாக அருளிச்செய்கிறார் ‘என்னை’ என்று தொடங்கி.
  ‘என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது’ என்றது, நான்
  என்னை ‘அஜ்ஞன், அசக்தன், அப்ராப்தன்’ என்று
  புத்திபண்ணியிருக்கவில்லையோ, சர்வஜ்ஞனாய், சர்வ சக்தியான தேவரீரைப்
  போன்று எண்ணிவிட்டதோ என்றபடி.