பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
354

New Page 1

    செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் - 1உன்னுடைய குணங்களால் வந்த பிரசித்தி அடங்கலும் அழியப்புகாநின்றது கண்டாய். 2எத்தனையேனும் அளவுடையாரும் தாங்கள் நின்ற அளவுகளைக் கழித்து அவ்வருகே காணப்புக்கால், அவ்வளவுகளையுடையனாயிருக்கும். 3“பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே, வக்கரனைக்கொன்றான் வடிவு”-திவ்விய மங்கள விக்கிரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பற்றிப் பேசுமவர்கள் யாதோர் அளவு சொல்லுவார்கள், அவ்வளவாயிருக்குமத்தனை. உலப்பிலானே-ஸ்வரூப குணங்கள் புருஷர்களுடைய புத்திக்கு உட்பட்டவல்லாத அளவாய், தான் ஓர் எல்லையிலே இருக்குமோ? என்னில், உலப்பிலானே-இயல்பிலே எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை. 4தனக்கும் தன்தன்மை அறிவரியானேயன்றோ. எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி-5வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக்

____________________________________________________

1. கீர்த்தியை வர்ணித்ததற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘உன்னுடைய’
  என்று தொடங்கி.

2. “செலக் காண்கிற்பார்” என்பதற்கு, முன்புண்டான ஞானம் போராது என்று
  அதனைக் கழித்து, மேலும் மேலும் ஞானாதிசயத்தைச்
  சம்பாதித்துக்கொண்டு காணவல்லார் என்று பொருள் அருளிச்செய்கிறார்
  ‘எத்தனையேனும்’ என்று தொடங்கி. ‘அவ்வருகே காணப்புக்கால்’
  என்றது, மேலும் மேலும் ஞானாதிசயத்தைச் சம்பாதித்துக் கொண்டு
  காணப்புக்கால் என்றபடி. ‘அவ்வளவுகளையுடையனாயிருக்கும்’ என்றது,
  “காணுமளவும் செல்லும்” என்றதற்குப் பொருள். ஆக, முதல் வரிக்குப்
  பொருள், மேலே மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள்
  காணவல்ல அளவுக்கும் அப்பாற்பட்டுச் செல்லக்கூடிய
  கீர்த்தியையுடையனே என்பது.

3. அப்படிக் காண்பார் காணுமளவான கீர்த்தியையுடையவன் என்பதற்கு,
  பிரமாணம் காட்டுகிறார் ‘பேசுவார்’ என்று தொடங்கி. “வடிவு” என்றது,
  ஸ்வரூப குணங்களுக்கும் உபலக்ஷணம். இது மூன்றாம் திருவந். 21.
  மேற்கோள் காட்டிய பாசுரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘திவ்ய
  மங்கள விக்கிரஹத்தின்’ என்று தொடங்கி.

4. திருவாய்மொழி, 8. 4. 6.

5. “எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப்
  பொருள் அருளிச்செய்கிறார், “மூர்த்தி” என்பது விக்கிரஹமாய்,
  அதனாலே அழகினை விவக்ஷித்து, விக்கிரஹ சௌந்தர்யத்தாலே எல்லா
  உலகங்களையும் சேஷமாகக்கொண்டவன் என்பது, முதற்பொருள்.
  “மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், விக்கிரஹத்தைக் கண்டவாறே ‘இவனே
  எல்லா உலகங்களுக்கும் சேஷி’ என்று தோற்றும்படியாயிருப்பவன்
  என்பது, இரண்டாவது பொருள்.